???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வைட்டமின் டி குறைபாடு: இந்தியாவில் பெருகிவரும் உடல்நல அபாயம்!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   01 , 2019  03:33:44 IST


Andhimazhai Image
இந்த தகவலைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். வெயில் பொளந்து கட்டும் நாடான இந்தியாவில் அதிகமானோருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
 365 நாட்கள் சூரிய வெளிச்சம் உள்ள இந்தியாவில் வைட்டமின் டி குறைபாட்டினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நம்பமுடியாத விஷயமாக இருக்கலாம். ஆனால் உண்மை இதுதான்.
டெல்லியில் உள்ள ’மெடாண்டா’ மருத்துவக் கல்லூரியின் , சுரப்பியல் பிரிவின்  தலைவர் மருத்துவர் மித்தல் . இவர் வைட்டமின் டி குறைபாடு குறித்து  செய்த ஆய்வில் பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் வைட்டமின் டி குறைபாடு பற்றி கண்டுபிடித்துள்ளார். லக்னோ மருத்துவக் கல்லூரியில் இவர் பணியாற்றியபோது, அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.
 
அவர் சிகிச்சை அளித்த கிராமங்களில் இருந்த குழந்தைகள் எலும்பு வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் குடிக்கும் நீரில்  ஃப்ளோரைடு-யின் அளவு அதிகமாக இருப்பதால் எலும்பு வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்று அவரின் ஆய்வில் தெரியவந்தது. ஆனால் இதுமட்டும்தான் காரணமா? வேறு காரணங்கள் இருக்கமா ? என்று மேலும் ஆய்வு  செய்தார். அங்கிருக்கும் குழந்தைகளின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருப்பது தெரிய வந்தது.
 
உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கு கால்சியம் சென்று சேர வைட்டமின் டி- உதவுகிறது. இதைத்தொடர்ந்து நகரங்களில் வாழும் மக்களிடம் வைட்டமின் டி பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர்களுக்கும் இந்த குறைபாடு இருப்பதை அவர் கண்டறிந்தார். இப்போது இந்தியர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை ஆகிவிட்டது.
 
நம்மில் பலர் அதிகாலை வெயிலில்தான் வைட்டமின் டி அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறான தகவல். மதியம் 1 மணி முதல் 3 மணிவரை உள்ள வெயிலில்தான் வைட்டமின் டி அதிகமாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் நாம் வெளியில் செல்வதை தவிர்த்துவிடுகிறோம்.
 
 
அப்படி வெளியில் சென்றாலும் , குறிப்பாக பெண்கள் தலை முதல் கால் வரை துணியால்  மறைத்துக்கொண்டு வெளியில் செல்கிறார்கள்.  இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைப்பதில்லை. இதுதான் நம் மக்களுக்கு இந்த குறைபாடு வரக்காரணம்
 
 
வைட்டமின் டி குறைபாடு : கண்டறிய என்ன வழி ?
 
உங்கள் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்தால் எளிதில் கண்டறிந்துவிடலாம். அப்படி பரிசோதனை செய்ய முடியவில்லை என்றால் சில அறிகுறிகளை வைத்துக் கண்டறிய முடியும்
 
 
அறிகுறிகள்
 
உடல் வலி, சோர்வு, மாடிப் படிகள் ஏறும்போது எலும்புகளில் ஏற்படும் வலி. இவையெல்லாம் இருந்தால் வைட்டமின் டி குறைபாடு இருக்குமோ என்று சந்தேகப்படலாம்.
 
 
தீர்வு
 
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். வைட்டமின் டி குறைபாடு இருக்கும் என்று தெரிந்தால்  மருத்துவர்கள் ஊசி போட்டு சரிசெய்யப்பார்ப்பார்கள். ஆனால் அதையெல்லாம் விட மருந்துக்கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும் வைட்டமின் டி மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டாலே சரியாகி விடும்.
 
 
பொதுவாக  உங்கள் ரத்தத்தில்  20 நேனோ கிராம் அளவுக்குக் கீழே  வைட்டமின் டி இருந்தால்  இது குறைபாடு எனக் கருதப்படும். 12 நேனோகிராமுக்குக் கீழ் இருந்தால்தான் உண்மையில் கவலைப்படவேண்டும். வைட்டமின் டி மாத்திரைகளை அதிகமாக விற்பதற்காக பல ஆய்வகங்கள் வைட்டமின் டி 30 நேனோ கிராமுக்கு மேல் இருக்கவேண்டும் என்று குன்ஸாக அடித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. எனவே கவனத்துடன் இருக்கவும்.
 
 
வெளிநாடுகளில் இந்த பிரச்னைகளைத் தீர்க்க உணவுப்பொருட்களில் நேரடியாக வைட்டமின் டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல இந்தியாவிலும் உணவு பொருட்களில் வைட்டமின் டி சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...