அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தந்தை புகாரால் மீண்டும் உயிர்பெறும் விஷ்ணுபிரியா வழக்கு

Posted : புதன்கிழமை,   மார்ச்   11 , 2020  22:16:51 IST

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். இவர் பள்ளிபாளையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கை விசாரிக்க அப்போதைய திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த வி‌‌ஷ்ணுபிரியாவை, விசாரணை அதிகாரியாக நீதிமன்றம் நியமித்தது.

இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த வி‌‌ஷ்ணுபிரியா அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கை முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதிய ஆதாரம் இல்லாததால் கோவை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில் வி‌‌ஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட அவருடைய லேப் டாப், செல்போன், டேப் ஆகியவற்றில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவரது தந்தை ரவிக்குமார் கடந்த மாதம் நாமக்கல் எஸ்.பி. அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

இது தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதனையடுத்து வி‌‌ஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்குமார் நாமக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்பு செவ்வாய்கிழமை நேரில் ஆஜரானார். அவரிடம் 23 கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டது. இதையடுத்து வெளியே வந்த வி‌‌ஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...