அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விஷமக்காரன்: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   மே   27 , 2022  12:30:50 IST


Andhimazhai Image

மனிதர்களை தனக்கேற்றபடி கையாளத் தெரிந்த ஒருவன் மனைவியுடனும் காதலியுடனும் சேர்ந்த வாழ மேற்கொள்ளும் தில்லாலங்கடி விளையாட்டே ‘விஷமக்காரன்' திரைப்படம்.

 

மனிதர்களின் வாழ்க்கை சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லும் வாழ்க்கை பயிற்சியாளராக இருக்கிறார் நாயகன் வி என்கிற விஜய் குப்புசாமி. அவரிடம் நண்பருக்கு ஆலோசனை கேட்டு வருகிறார் நாயகி அனிகா விக்ரமன். நாயகனின் அறிவிலும் அன்பிலும் வியந்து போகிறார். நாளடைவில் இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. இருவரும் தங்களின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்து கொள்கின்றனர்.  நாயகனுக்கு முந்தைய  காதல் ஒன்று இருப்பதையும் அறிந்து கொள்கிறார் அனிகா. மனப்பூர்வமாக இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திடீரென்று ஒரு நாள் தன்னுடைய முன்னாள் காதலியை (சைத்ரா ரெட்டி) வி சந்திக்க நேர்கிறது. இருவரும் பழக ஆரம்பிக்க   அனிகாவிற்கு சந்தேகம் அதிகரிக்கிறது. இந்த சந்தேகம் கண்காணிப்பாக மாறி மூவரின் வாழ்க்கையிலும் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது?  என்பதே படத்தின் மீதிக்கதை.

 

தமிழில் ஏற்கனவே வெளிவந்துள்ள முக்கோண காதல் கதை திரைப்படங்கள் கிளுகிளுப்பாகவோ, காமெடியாகவோ இருக்கும். இதில் விஷமக்காரன் எந்த வகை என்றே தெரியவில்லை. வித்தியாசமாகக் கதை சொல்ல முயன்று அலுப்பை ஏற்படுத்துகிறார் படத்தின் இயக்குநரும் நாயகனுமான வி.

 

படம் மூன்று பேரை மட்டுமே சுத்தி சுத்தி வருகிறது. தமிழ் படத்தில் நடிக்கிறோம் என்பதை நாயகன் மறந்திருப்பார் போல். படம் முழுக்க ஆங்கிலத்திலேயே பேசி அலுப்பை ஏற்படுத்துகிறார். நாயகிகள் அனிகா விக்ரமன், சைத்ரா ரெட்டி சிறப்பாகவே நடித்துள்ளனர்.

 

படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்ற அளவிற்கு பலம் சேர்த்திருக்கிறது. படம் எப்போது முடியும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, கிளைமாக்ஸ் காட்சி நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

 

திரைக்கதை பலமாக இருந்திருந்தால் விஷமக்கரான் வித்தியாசமாகத் தெரிந்திருப்பான்.

 

தா.பிரகாஷ்

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...