???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிகச்சம்பளம் கேட்கிறார் விக்ரம்பிரபு.

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   29 , 2014  00:45:48 IST

விக்ரம்பிரபுவுக்கு வரிசையாகப் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவரிடம் தேதி வாங்க நிறையத் தயாரிப்பாளர்களும் அவரிடம் கதை சொல்ல நிறைய இயக்குநர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். கடைசியாக அவர் நடித்து வெளியான சிகரம்தொடு படம் முந்தைய படங்கள் அளவு வெற்றியை ஈட்டவில்லையென்றாலும் அவரைத் தேடிவருகிறவர்கள் குறையவில்லையாம். அதற்குக் காரணம், அடுத்து அவர் நடித்து வெளிவரவிருக்கும் படம் வெள்ளைக்காரதுரை. மதுரைஅன்பு தயாரிப்பில் எழில் இயக்கியிருக்கும் இந்தப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறதாம். அதைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படமும் வரவேற்புப் பெறும் என்பது அவருடைய நம்பிக்கை.

 

இதன் காரணமாக தன்னுடைய சம்பளத்தை அவர் பன்மடஙகு உயர்த்தியிருப்பதுதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதாம். வெள்ளைக்காரதுரை படத்துக்கு அவருடைய சம்பளம் சுமார் ஒருகோடி என்று சொல்லப்படுகிறது. விஜய் இயக்கும் படத்துக்கும் அதேஅளவு சம்பளம்தான் வாங்கியிருக்கிறாராம். ஆனால் அதற்குப் பிறகு தேடிவருகிறவர்களிடம் கதை கேட்பதற்கு முன்பாக தன்னுடைய சம்பளத்தைச் சொல்லிவிடுகிறாராம். அதனாலேயே வருகிறவர்களில் பாதிப்பேர் திரும்பிப்போய்விடுவதாகச் சொல்கிறார்கள். அப்படி எவ்வளவு கேட்கிறார்? மூன்றுகோடி கேட்கிறாராம். ஒன்றிலிருந்து ஒன்றரை என்றால் குற்றமில்லை, சிகரம்தொடு படம் சூப்பர்ஹிட்டாகியிருந்தாலும் குற்றமில்லை, இரண்டுமே இல்லாமல் இவர் சம்பளத்தைப் பலமடங்கு உயர்த்திவிட்டாரே என்று புலம்பிக்கொண்டே பலர் போய்க்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...