???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சுகாதாரத்தில் பின்னுக்குச் சென்ற தமிழகம்! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு 0 குடிகாரர்களால் மனைவி உயிரிழப்பு: 6 மணி நேரம் போராடிய மருத்துவர் 0 தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின் 0 திருமணம் ஆகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விக்ரம் பிரபுவுக்கு ஏமாற்றம்!

Posted : புதன்கிழமை,   ஜுலை   30 , 2014  01:33:39 IST

   

    தமிழ்த்திரையுலகின் முக்கிய நிதியாளரான மதுரைஅன்பு முதன்முறை நேரடியாகத் தயாரிக்கும் படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். எழில் இயக்கும் அந்தப்படத்துக்கு வெள்ளைக்கார துரை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தொடக்கத்திலிருந்தே விக்ரம்பிரபுவுக்கு இந்தப்பெயரில் திருப்தியில்லையாம். இதனால் நிறைய யோசித்து இந்தப்படத்துக்கு மன்னர்மன்னன் என்று பெயர் வைக்கலாம் என்று முடிவுசெய்தார்கள். அந்தப்பெயரை எடுத்துக்கொண்டு தயாரிப்பாளர்சங்கத்தில் பதிவு செய்யலாம் என்று போனால், இந்தப்பெயர் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டார்களாம். படத்தின் நாயகனுக்குப் பிடித்துவிட்ட பெயரை எதற்காகவும் இழக்க விரும்பமாட்டார்கள். அதனால் இந்தப்பெயரை யார் பதிவு செய்திருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களை அணுகி, படத்தின் தலைப்பைக் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். பெயரைத் தருவதற்காக மட்டும் பல இலட்சங்கள் பணம் கேட்டார்களாம். இதனால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவரை அழைத்துப் பேசலாம் என்று கூப்பிட்டிருக்கிறார்கள்.

 

நான் படத்தின் முப்பதுவிழுக்காடு படப்பிடிப்பை முடித்துவிட்டேன். அந்தச்செலவு மொத்தத்தையும் கொடுத்தால் பெயரைத் தருகிறேன் என்று சொல்லிவிட்டாராம். பலமுறை பேசிப்பார்த்தும் அவர் இறங்கி வரவில்லையாம். நினைத்தது நடக்கவில்லையென்பதால் படத்துக்கு வெள்ளைக்காரதுரை என்றே இறுதி செய்துவிட்டார்கள்.

 

மன்னர்மன்னன் என்கிற பெயர் நம்முடைய குடும்பப்பெருமைக்குப் பொருத்தமாக இருப்பதோடு நம்முடைய இமேஜ் உயரவும் வழிவகுக்கும் என்று ஆசையோடு இருந்தாராம் விக்ரம்பிரபு. அது நடக்காமல் போனதால் வருத்தத்தில் இருக்கும் அவர் இப்போதெல்லாம் பெயரில் என்ன இருக்கிறது? படம் நன்றாக இருந்தாலே போதும் என்று தம்முடைய நண்பர்களிடத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...