விக்ரம் திரைப்பட வசூல்: உதயநிதி பகிர்ந்த புதிய தகவல்!
Posted : வெள்ளிக்கிழமை, ஜுன் 10 , 2022 14:49:52 IST
“இந்த வாரமும் விக்ரம் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் போல் தெரிகிறது” என நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
இந்த நிலையில் விக்ரம் படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இந்த வாரமும் விக்ரம் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் போல் தெரிகிறது. நம்ப முடியாத வசூல் என்று தெரிவித்துள்ளார்.