???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்னை விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள்: விஜயபிரபாகரன் வேண்டுகோள்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   15 , 2020  21:48:37 IST

தேமுதிக 16ம் ஆண்டு தொடக்க விழா கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில்  புதிதாக 100 இளைஞர்கள் கட்சிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசும்போது, தேமுதிக இன்னும் அதிக அளவில் வளரும். அதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்.
 
இந்தி தெரியாது போடா என்று பலரும் தவறாக பேசி வருகிறார்கள். அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்பது கேப்டனின் இலக்கு. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 100% வேலை வாய்ப்பை தந்திருந்தால் தமிழர்கள் வெளியே சென்றிருக்க மாட்டார்கள். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது கேப்டனின் முழக்கம். வாழ்வுக்கு எது தேவை என்பதை நாம் முடிவு செய்து கொள்வோம்.
 
ஆனால் யாரும் நமக்கு வழி காட்ட வேண்டாம். 2021ல் எங்க அப்பா தான் கிங் . பிறந்ததிலிருந்து அவர் எனக்கு கிங்காக தான் இருந்திருக்கிறார். கேப்டன் என்றால் கேப்டன் தான், அவர் தலைமை தாங்க வேண்டும். பொதுக்குழு செயற்குழு கூடி தேர்தல் நேரத்தில் உரிய முடிவை அறிவிப்போம். கொரோனா அச்சம் காரணமாக 200 பேர் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சியாக இது நடைபெறுகிறது. 100 பேர் வந்ததாக கருதவில்லை, 100 குடும்பங்கள் தேமுதிகவில் இணைந்ததாகவே கருதுகிறேன்.
 
என்னை விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள், என்னை ஒரு தோழனாக குடும்பத்தில் ஒருவனாக மச்சானாக மாமனாக சகோதரனாக பாருங்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...