???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   14 , 2018  23:06:22 IST

சென்னை செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா குடோன் மற்றும் அவரது வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
 
குட்கா குடோன் அதிபர் மாதவராவ், அவரது பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, மற்றும் சீனிவாசராவ் ஆகியோர் கைது செய்யப்படடனர். குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக கலால்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த முறைகேடு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடந்த மாதம் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர் மட்டுமே இருந்தது.
 
ஆனால், தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும், தேவைப்பட்டால் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து  இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கடந்த வாரமே விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்ததால், உதவியாளர் சரவணன் மட்டும் ஆஜரானார்.
 
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜயபாஸ்கரும், ரமணாவும் சனிக்கிழமையான இன்று ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...