அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இழிவுபடுத்தும் வகையில் மீம்ஸ் வெளியிடக்கூடாது: ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   07 , 2022  16:23:56 IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அவருடைய ரசிகர்களுக்கு இழிவுபடுத்தும் வகையில் மீம்ஸ் வெளியிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் நெல்சன் இயக்கத்தில் தயாராகியிருக்கிறது. இந்தமாதம் 13-ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய் தரப்பிலிருந்து ரசிகர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை விஜய் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித்தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில், இணைய தளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. இதுகுறித்து விஜய்யின் கடுமையான உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது, நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இருப்பினும், விஜய்யின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய்யின் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் குடும்பத்தின் திருமண விழாவில் விஜய் கலந்து கொண்டார். அதே விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வந்திருந்தார். இருவரும் யதார்த்த சூழலில் சந்தித்துக் கொண்டனர். சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் விடை பெற்றனர். இந்த சூழலில்தான் விஜய்யிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு அறிக்கை வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...