அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்! 0 தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பீஸ்ட் பட வெற்றி..விருந்து கொடுத்த விஜய்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   26 , 2022  17:57:19 IST

சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் வெற்றிக்கு அப்படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்துள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய், பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது, 'எங்களுக்கு இந்த விருந்து வழங்கியதற்கு நன்றி விஜய் சார். இது படக்குழுவுடன் வேடிக்கை நிறைந்த மற்றும் மறக்கமுடியாத மாலை நேரம். விஜய் சாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பணியாற்றியது சிறப்பான தருணம். நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த அனுபவத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் உண்மையாக மதித்திக்கிறேன். உங்களின் அழகும் கவர்ச்சியும், சூப்பர் ஸ்டார்டமும் இந்தப் படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் மற்றும் காவ்யா மாறன் ஆகியோருக்கு இந்த மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்ததற்கும் இந்தப் படத்தை ஒன்றிணைத்ததற்கும் நன்றி. எங்களின் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர் இல்லாமல் இது சாத்தியமில்லை. தடைகளை தகர்த்தெறிந்து, அன்பையும் ஆதரவையும் பொழிந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல நீங்கள் அனைவரும் விஜய் மற்றும் படக்குழுவினருடன் நின்று இந்தப் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்திருக்கிறீர்கள். சியர்ஸ்' என்று கூறியுள்ளார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...