???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது! 0 ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணி எதிர்ப்பு 0 கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஜய்ஆண்டனியின் மறுப்பு, இயக்குநர் வெறுப்பு!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   25 , 2014  01:40:38 IST

 
    விஜய்ஆண்டனி நடித்த சலீம் படம் வெற்றியடைந்ததும் வழக்கம்போல பிறமொழிகளிலிருந்து அந்தப்படத்தின் உரிமை கேட்டு வந்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் நிர்மல்குமாரின் கதைதான் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதால் தெலுங்குநடிகர் வெங்கடேஷ் அவரை அழைத்து தெலுங்கில் இந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். இதனால் இந்தப்படத்தைத் தெலுங்கில் செய்யப்போகிறேன் என்று இயக்குநர் நிர்மல்குமார் விஜய்ஆண்டனியிடம் சொல்லியிருக்கிறார். அவரோ இதன் உரிமை முழுக்க தயாரிப்பாளர் என்கிற முறையில் என்னிடம் இருக்கும்போது நீங்கள் எப்படி இதைத் தெலுங்கில் செய்யமுடியும் என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதன்பின்னர், இந்தப்படத்தின் உரிமை முழுவதும் என்னிடம்தான் இருக்கிறது. இந்தப்படத்தை தெலுங்கில் எடுக்கும்போது நானே நடிக்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன் எனவே நீங்கள் இந்தப்படத்தை வேறுமொழிகளுக்குக் கொண்டு செல்லும் வேலையில் ஈடுபடவேண்டாம் என்று கறாராகச் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் தெலுங்கில் இந்தப்படத்தை இயக்கினால் நிச்சயவெற்றியோடு நல்லசம்பளமும் கிடைக்கும் என்கிற இயக்குநர் நிர்மல்குமாரின் கனவு தவிடுபொடியாகிவிட்டதாம். சரி, கதை நிர்மல்குமாருடையது என்றால் அதற்கு விஜய்ஆண்டனி எப்படி முழுஉரிமை கொண்டாடமுடியும் என்று விசாரித்தால், கதை சொந்தமாக எழுதினால்தானே உரிமை கொண்டாடமுடியும், கொரியன் படத்திலிருந்து எடுத்தெழுதினால் அதற்கு இயக்குநர் உரிமை கொண்டாடமுடியாதல்லவா? இதானல்தான் இயக்குநர் எதுவும் பேசமுடியாமல் மனம்வெறுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...