???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிரடியாய் சம்பளத்தை உயர்த்திய விஜய்சேதுபதி!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   07 , 2014  04:41:25 IST

 
விஜய்சேதுபதி நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் அவருடைய வியாபாரமதிப்பு என்பது அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு கோடிகளுக்குள் தான் இருக்கிறதாம். அவர் ஆக்ஷன் படங்களில் நடித்து முழுமையான கதாநாயகன் என்கிற இடத்துக்கு வந்தால்தான் வியாபார மதிப்பு உயரும், சம்பளத்தையும் உயாத்தமுடியும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தக்கருத்தையெல்லாம் உடைத்து அடுத்தடுத்த படங்களுக்குத் தன் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம். அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களுக்கு மூன்றுகோடி வரை சம்பளம் வாங்கியிருக்கிறாராம். இந்தநிலையில் ஒரு தயாரிப்பாளரைப் பிடித்துக்கொண்டு அவரிடம் போய் கதையைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் ஒரு புது இயக்குநர். விஜய்சேதுபதிக்குக் கதை பிடித்திருக்கிறதாம். சம்பளம் மூன்றரை என்று சொல்லியிருக்கிறார். அதற்குள் இந்தத் தயாரிப்பாளருக்கு ஏதோ சிக்கல். இரண்டு மாதங்கள் இடைவெளிவிட்டுவிட்டார்கள். மறுபடி போய்க் கேட்டால் நீங்கள் வந்துபோனபிறகு, நிறையப் பேர் வந்துவிட்டார்கள்., இவற்றில் அரண்டு படங்களை ஒப்புக்கொண்டு தேதிகளும் கொடுத்துவிட்டேன், அதற்கு அடுத்து உங்கள் படம் செய்யலாம், ஆனால் இப்போது என்னுடைய சம்பளம் ஐந்துகோடி என்று சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. முன்பு பேசியதற்கும் இப்போதைக்கும் நடுவே அவருக்கு எந்தப்படமும் வெளியாகவே இல்லை. ஆனால் சம்பளம் மட்டும் மாதாமாதம் உயருகிறதே எப்படி? என்கிற வியப்புடன் நம்மால் கட்டுபடியாகாது என்று சொல்லி அந்தத்தயாரிப்பாளர் படமெடுக்காமலே போய்விட்டதாகச் சொல்கிறார்கள். படம் வராமலே கதாநாயகர்களின் சம்பளம் மட்டும் உயர்ந்து கொண்டிருப்பது எப்படி என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டாலே திரைப்படத்துறை சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...