???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் ஒற்றையாட்சி முறை இருக்கும் வரை தமிழர்களுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை : விக்னேஷ்வரன் பேட்டி

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   10 , 2014  01:57:04 IST

இந்தியா வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் ஒற்றையாட்சி முறையால் தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று கூறினார். அவர் மேலும் பேசியதாவது: வடக்கு மாகாண மக்கள் பல்வேறு சங்கடங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வடக்கு மாகாணத்தில் நாங்கள் செயல்பட முடியவில்லை. அங்கு இரண்டு நிர்வாகங்கள் செயல்படுகின்றன. அரசாங்கம் எங்களுக்கு பல தடைகளை போடுகிறது. நிர்வாகத்தில் ஆளுநரும் தலையிடுகிறார். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக பயன்படுத்தினால், தற்போதைய பொருளாதார உள்ளிட்ட மற்ற பயன்களையும் பெற முடியும். ஆனால், அதை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு விடவில்லை. சகல அதிகாரங்களும் மத்திய அரசின் கைகளில் உள்ள நிலையில், அவர்கள் என்ன தர நினைக்கிறார்களோ, அதை மட்டுமே நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஒற்றை ஆட்சியில் எவ்வித தீர்வையும் நாங்கள் பெற முடியாது. இலங்கை தமிழர்கள் பிரச்னையில் இந்தியாவால் மட்டுமே உதவ முடியும். 1987-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் சார்பில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா தான் கையெழுத்திட்டது. இந்நிலையில், இலங்கை தமிழர்கள் தொடர்பான பிரச்னைகளை பேச இந்தியாவுக்கு உரிமை உண்டு. இலங்கை தமிழர்கள் நலன் காக்கவும், அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கவும் இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும். மற்றவர்கள் தலையீடு இன்றி, நாங்கள் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...