???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   10 , 2020  21:39:29 IST

வேலூர் தமிழ்ச்சங்கம் மற்றும் ஊரீசு கல்லூரி சார்பில் தமிழர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் விழா நடந்தது. இதற்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தரும், வேலூர் தமிழ்ச்சங்க நிறுவனருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். விழாவில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், '30 வருடங்களாக இங்கே இருக்கும் இலங்கை தமிழ் மக்கள் பல விதமான சலுகைகளை பெற்றிருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பது பற்றி சிந்திக்கிறார்கள். அதில் சட்ட சிக்கல்கள் சில இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சட்ட சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும். அப்போதுதான் நன்மை கிடைக்கும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரட்டை குடியுரிமை சம்மந்தமாக ஒரு உடன்பாடு இல்லாத காரணத்தினால் சில பிரச்சினைகள் இருக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிடிபட்டவர்கள் அந்த கொலையில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களா? என்று எனக்கு தெரியவில்லை.

அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை அவர்களை விடுவிக்காமல் இருப்பதற்கு வேறு அரசியல் காரணங்கள் இருக்குமா? என எனக்கு தெரியாது" என்று தெரிவித்தார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...