???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரானோ: தமிழகம் 1458; சென்னை 1146! 0 கொரோனாவுக்கு தாவூத் இப்ராஹிம் பலியா? 0 கொரோனா: தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவு! 0 சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவர் ராமதாஸ் அறிக்கை 0 ஜூலை 15-ந்தேதி தமிழகத்தில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்: ஆய்வில் தகவல் 0 இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர் 0 மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக 8-ம் தேதி போராட்டம்! 0 பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: மத்திய பள்ளி கல்வித்துறை 0 சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 அமைச்சர்கள் 0 மேனகா காந்தி மீது வழக்குப் பதிவு! கேரள போலீஸ் நடவடிக்கை! 0 கீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு 0 மக்களிடம் 'மங்காத்தா' போல் மின்கட்டண வசூல் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: மு.க. ஸ்டாலின் 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஷ்யாவில் அமைதியாக கழிந்த இரண்டாம் உலகப்போர் வெற்றி தினம்!

Posted : சனிக்கிழமை,   மே   09 , 2020  21:59:12 IST


Andhimazhai Image
 
 
மேலே மேகம். கீழே கொரோனா. இரண்டுக்கும் நடுவே அந்த மிகப்பெரிய விமானங்கள் பெரும் வண்டுகளின் கூட்டம்போல் மிதந்து செல்கின்றன. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் மே9 அன்று நடந்த நிகழ்வு அது. உலக வரலாற்றில் முக்கியமான தினம் ஒன்றின் 75வது தினக் கொண்டாட்டம். 
 
ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் ரஷ்யாவின் செஞ்சட்டைப் படையினர் தோற்கடித்த நாளின் கொண்டாட்டம் அங்கே வெற்றி தினமாக, ஆண்டுதோறும் முக்கிய அரசு நிகழ்வாகக் கொண்டாடப்படும். 75வது ஆண்டு என்பதால் கொண்டாட்டங்கள் ஆரவாரமாக  திட்டமிடப்பட்டிருந்தன. 
 
செஞ்சதுக்கத்தில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பும்  மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் திறப்புவிழாவும் இதையொட்டி நடக்கவிருந்தன. ரஷ்ய அதிபர் புடின், அங்கே சரிந்துவரும் தன் செல்வாக்கை மேம்படுத்த இந்த நிகழ்வுகளைத் திட்டமிட்டிருந்தார்.ஆனால் கொரோனாவால் இவை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. புடின் ஒரு ராணுவ வீரர் கல்லறையில் பூங்கொத்து வைக்கும் நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொண்டு அடக்கி வாசித்தார்.
 
தரையில் ரஷ்ய ராணுவம் மலர் வளையம் வைக்கும்நிகழ்ச்சியை நடத்தியபோது வானில் 75வது தினத்தை நினைவூட்டும் வகையில் 75 விமானங்கள் அணிவகுத்தன. முதலில் வந்தது பெரியவகை ஹெலிகாப்டரான மி-26. அதைத் தொடர்ந்து மி-8 ஹெலிகள். அதன் பின்னர் போர் விமானங்கள். மிகப்பிரமாண்டமான ரஷ்ய போர்விமானமான ஏ-50, இலியுஷின் ஐஎல்-76 விமானங்கள் போன்றவை. வானமே வண்ணமயமாக ஆனது. ரஷ்ய கொடியின் வண்ணத்தில் புகைகளை அவை பீய்ச்சி அடித்தன.
 
இந்த கொண்டாட்டம் ரஷ்யாவின் பிற சிறு நகரங்களில் வான் கொண்டாட்டங்களாக நடைபெற்றது.
1941-ல் தொடங்கி 1945-ல் முடியும்வரை நடந்த ஹிட்லரின் ஜெர்மனியுடன் ரஷ்யா மேற்கொண்ட போரில் ரஷ்யக் குடிகள் 2.6 கோடிப் பேர் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது. 
 
“ 1945-ல் ரஷ்யாவின் மேற்கு எல்லையில் பறந்தபோது அங்கே எந்த வீடோ, கட்டடமோ இல்லாததைக்கண்டேன். பெண்கள், குழந்தைகள், முதியோர் என ஏராளமானோர் நாஜிப்படைத் தாக்குதலில் இறந்துவிட்டனர். அவர்களை எண்ணி மாள எங்களால் முடியவில்லை என உடனிருந்த ரஷ்ய தளபதி கூறினார்,” என அமெரிக்க அதிபர் ஐசனோவர் எழுதி உள்ளார். இவர் அமெரிக்கப் படைத் தளபதியாக இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்தவர்.
 
சோவியத் ரஷ்யா பேரிழப்புக்கு உள்ளானபோதும், பின் வாங்காமல் நாஜிப்படைகளை அழித்து மேற்குலக நாடுகளுக்கு ஏற்பட இருந்த போர் இழப்பை தவிர்த்தது என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். 
 இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி சரணடைந்த தின மே9, ஐரோப்பாவில் பல நாடுகளிலும், முன்னாள் சோவிய உறுப்பு நாடுகளிலும் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. பெலாரஸ் கோரோனா பற்றிக் கவலையே படாமல் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்தியே விட்டது!


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...