செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜகதீப் தன்கர் வெற்றிப் பெற்றுள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு!
Posted : சனிக்கிழமை, ஆகஸ்ட் 06 , 2022 19:42:59 IST
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜகதீப் தன்கர் வெற்றிப் பெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று காலை முதல் வாக்களித்து வந்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜகதீப் தன்கர் வெற்றிப் பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜகதீப் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர். சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜகதீப் தன்கர் வழக்கறிஞராக தனது பொதுவாழ்வை தொடங்கியவர். பின்னர் உச்சநீதிமன்றத்தில் சில காலம் பணியாற்றினார். பின்னர் அரசியலுக்கு வந்தவர் வி.பி.சிங் அமைச்சரவையில் இடம்பெற்றார். அதனைத் தொடர்ந்து, பாஜக சார்பில் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். மம்தாவுக்கும் இவருக்கும் ஏற்பட்ட மோதல் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவரை குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
|