???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அகில இந்திய கால்நடை மருத்துவ சங்கம் - நிர்வாகிகள் தேர்வு

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   12 , 2019  06:05:10 IST


Andhimazhai Image

மத்திய பிரதேசம் மாநிலம்,போபால் நகரில் நடைப்பெற்ற அகில இந்திய கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் கருத்தரங்கம் மற்றும் பொதுக்குழுவில் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

மத்திய பிரதேச மாநில கால்நடை பராமரிப்பு துறையின் அமைச்சர் லக்கான் சிங் யாதவ் தலைமை வகித்தார். இவ்விழாவில் இந்திய அரசின் மத்திய கால்நடை பராமரிப்பு மீன்வளம் மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர்களான பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் சஞ்சீவ் பல்யான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.... இந்திய நாட்டின் பொருளாதார மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டில் கால்நடை மருத்துவர்களின் பங்கு எனும் தலைப்பிலான கருத்தரங்கு நடந்தது.

 

இறுதியாக அகில இந்திய கால்நடை மருத்துவர் சங்கத்தின் பொதுக் குழுவில் மத்திய பிரதேச சங்கத்தின் மாநில தலைவர் மரு.உமேஷ் சந்திர சர்மா அகில இந்திய கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மரு.தணிகைவேலு,  சங்கத்தின் பொதுச் செயலாளராகவும்,டில்லியை சார்ந்த மரு.விஐய்குமார் பொருளாளராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில இணைச் செயலாளர் மரு.கீரை தமிழ் அசோகன் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இவ்விழாவில் தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் மாநில நிர்வாகிகளான மருத்துவர்கள் ரமணி,ராம்குமார்,சக்திவேல்,செல்வம் மற்றும் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...