???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு 0 மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு 0 தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் 0 சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 0 முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! 0 எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு 0 பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி! 0 அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அண்ணா பெயரில் இப்படி ஓர் அடிமை அரசா? : கி.வீரமணி கேள்வி

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   17 , 2019  06:00:32 IST


Andhimazhai Image

பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் சாதி, மத அடையாளங்களை காட்டும் வண்ணக் கயிறுகளை கட்டி வருவது தடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதைத்தொடர்ந்து இந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.

 

அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

 

பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி, மதங்களை அடையாளம் காட்டும் வண்ண வண்ணக் கயிறுகளைக் கட்டி வருவது தடுக்கப்படவேண்டும்; பள்ளிகளுக்கு அவ்வாறு வரக்கூடாது என்ற கல்வித் துறையின் சுற்றறிக்கை வரவேற்கத்தகுந்த ஒன்றே!

 

படிக்கும் பருவத்திலேயே ஜாதி, மத உணர்வை மாணவர்கள் மத்தியில் ஊட்டுவது எவ்வளவுப் பெரிய விபரீதம்! இதுகுறித்து ‘விடுதலை’யில் தலையங்கம் (15.8.2019) தீட்டப்பட்டது. கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்களும் கல்வித் துறையின் சுற்றறிக்கையை வரவேற்றுக் கருத்தும் கூறினார்.

 

இந்த நிலையில், பி.ஜே.பி., இந்து முன்னணியைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழக அரசை மிரட்டும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டனர்.

 

அரசு மத விஷயத்தில் தலையிடுகிறது என்று ஆவேசமாக அறிக்கைகளை வெளியிட்டவுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘‘அதுபோல் சுற்றறிக்கை கல்வித் துறை சார்பில் வெளியிட்டது என் கவனத்துக்கே வரவில்லை; ஏற்கெனவே இருந்த நிலை தொடரும்‘’ என்று கூறியுள்ளார். ஏன் இந்த புதுக்குழப்பம்?

 

 

‘‘பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் அரசு செயல்படும்‘’ என்றும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

 

 

இதைவிடக் கேலிக் கூத்து ஒன்று இருக்க முடியுமா?

 

இந்தத் தலைவர்கள் - ஜாதி, மத அடையாளங்காட்டும் குறிக்கோளோடு, கயிறுகளோடு வரவேண்டும் என்ற கொள்கையை உடையவர்களா?

 

பழைய நிலை தொடரும் என்றால், எந்தப் பழைய நிலை? அந்தக் காலகட்டம் என்ன? பழைய நிலை என்று சொல்லுகிறபோது மாணவர்கள் இப்படியெல்லாம் வருவது கிடையாதே! சமீபத்தில்தானே இந்த நிலை!

 

அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்பது ஜாதி, மத சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் ஊட்ட வேண்டும் என்பதுதானா?

 

பி.ஜே.பி., சங் பரிவார்கள் ஒன்றைச் சொன்னால், அதற்குமேல் அட்டியில்லையா? நடுங்குவது நல்லதா?

 

அண்ணா பெயரில் இப்படி ஓர் அடிமை அரசா?

 

 

கல்வி அமைச்சரின் கருத்து விலக்கிக் கொள்ளப்படவேண்டும் - அண்ணா பெயரையும், திராவிட என்ற பெயரையும் கட்சியில் இணைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவோருக்கு இது அழகல்ல. பள்ளிகளிலேயே ஜாதி, மதக் கலவரத்தைத் தூண்டலாமா? இது அபாயகரமானது - ஆட்சிதான் பொறுப்பு ஏற்கநேரிடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...