???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழர்களை கொன்று குவிப்பதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் அதிபர்: வீரமணி

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   19 , 2019  06:09:02 IST


Andhimazhai Image

தமிழர்கள் கொன்று குவிப்பதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் ஜனாதிபதியாகிவிட்டார் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

 

இலங்கையில்  நடைபெற்ற இறுதிப்போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் ஜனாதிபதியாக அமர்ந்துவிட்டார் - இந்திய மத்திய அரசின் வெளியுறவுத் துறை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழ்நாட்டில் உருவாக்கப்படுவது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

 

இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்தே ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே தேர்வாகியுள்ளார்;  அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜிதா பிரேமதாசா தோல்வி அடைந்துள்ளார்.

 

வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே முந்தைய ராஜபக்சே அரசு ஆட்சியிலிருந்தபோது, இன அழிப்பு வேலையில் ஈடுபட்டவரே! இந்த தமிழர் இன ஒடுக்கல் - இன அழிப்பு வேலையை வரலாறு ஒருபோதும் மறைத்துவிட முடியாது.

 

அவரது அண்ணன் முன்னாள் அதிபர் ராஜபக்சேவையே மிஞ்சும் அளவுக்கு - இந்தப் புதிய அதிபர் - இராணுவத் துறை செயலாளராக இருந்தபோது ஈடுபட்ட மனித உரிமை மீறல்கள், பறிப்புகள் உள்பட, உலக மக்களின் கண்டனத்திற்காளானவையே!

 

அய்.நா.வின் விசாரணைக் கமிஷன் கேள்விக் குறியே!

 

அய்.நா. விசாரணைக் கமிஷன் என்பதும் ஒன்றுமில்லை, ஈரமான பட்டாசு கொளுத்துவதுபோலவே ஆகிவரும் நிலையில், அங்குள்ள தமிழினம் மீண்டும் ஒரு கடும் சோதனையை சந்திக்கும் அவலமான அபாயகரமான தர்பார் அமைந்துள்ளது - வேதனையிலும், வேதனையாகும்!

‘ஓநாய் ஒருபோதும் சைவமாகாது’ என்பது எப்படியோ, அப்படித்தான் இப்புதிய தலைமையின் போக்கும் இருக்கக்கூடும்.

 

போராட்டம் கூடாதாம்! அதிபரின் உரையில் எச்சரிக்கை

 

கோத்தபய ராஜபக்சே இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள ஜயசிறீ மகாபோதி பவுத்த விகாரை அரங்கில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு நீண்ட உரையாற்றினார். அதில் முக்கியமாக நாட்டின் வளர்ச்சியே தற்போது நமக்கு மிகவும் முக்கியமானது.நாட்டில் தேவையற்ற முடிவில்லாத போராட்டங்கள் என்று கூறிக்கொண்டு போராடி வருகின்றனர். இவர்களால் நமது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையேற்படும் என்று பேசியுள்ளார்.

 

இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போரின் போதும் அதற்கு முன்பும் காணாமல் போன தமது உறவுகளின் நிலை என்ன? அவர்கள் உயிருடன்  உள்ளனரா  அல்லது கொல்லப்பட்டார்களா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தொடர்ந்து  அமைதியான முறையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இது போன்ற போராட்டங்களை மனதில் வைத்து தனது உரையில் எச்சரிக்கை செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

 

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஜனாதிபதியானவுடன் முதலாவது நியமனம் இதுவாகும். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இறுதிப்போரின்போது, இராணுவத்தின் 53 ஆவது படையணிக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இறுதிப் போரில் தமிழர்களைக் கொன்று குவித்த பாதுகாப்புத் துறை செயலாளர் இப்பொழுது ஜனாதிபதி. இறுதிப் போரின்போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்குத் தலைமை வகித்தவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய செயலாளர்.

 

எப்படி இருக்கிறது?

 

இதன் விளைவு என்னாகும் என்ற அச்சம் நம்மை உலுக்குகிறது.

 

தொப்புள்கொடி உறவுள்ள நம் ஈழத் தமிழரின் வாழ்வுரிமைகளுக்கு - கேள்விக் குறிகளாக மாறிடும் இருண்ட அரசியல் சூழல் வந்துள்ளது.

 

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் மோடியும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை நியாயமான வகையில் பாதுகாப்பதை  அதன் முக்கிய கடமையாகக் கொள்ளவேண்டும்.

 

இந்தியாவின் வெளியுறவுத் துறை கவனிக்கவேண்டியது

 

இந்தியாவின் வெளியுறவுத் துறை மிகவும் கவனம் செலுத்தவேண்டும். இலங்கை எப்படி நடந்துகொள்ளும்  என்பது துல்லியமாகக் கண்காணிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

சிறுபான்மையினராகிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களும் சரி, இஸ்லாமிய சிறுபான்மையினராக இருப்பவர்களும் சரி, அந்நாட்டு குடிமக்கள் என்கிறபோது, அவர்களது உரிமைகள் மனிதநேய அடிப்படையில் பாதுகாக்கப்படவேண்டும் என்பது இந்திய அரசால், தமிழக அரசால் வற்புறுத்தப்படவேண்டும்!

 

ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தேவை!

 

தமிழ்நாடும், தமிழ்நாட்டுக் கட்சிகளும், அமைப்புகளும் - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றினை புதிதாக ஒத்தக் கருத்துள்ளவர்களைக் கொண்டு, சட்டப்பூர்வ முறைகளில் - அய்.நா.வின் மனித உரிமைகள்  காப்புரிமையின்படி காக்க உறுதி பூண்டு, ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்ல; எந்த நிலையிலும் எங்கள் சொந்தங்கள் - தொப்புள்கொடி உறவுகள் என்பதை, இன அடிப்படைகளையும்கூட தாண்டி, மனிதநேயத்தோடு பாதுகாக்க முன்வரவேண்டும். இது மிகவும் அவசியமாகும்.

 

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...