???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி! 0 ஜூன் 1 முதல் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி 0 தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு 0 ஆறுமுகம் தொண்டைமான் மரணம்! 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   22 , 2019  23:25:53 IST

பா.ஜ.கவின் துணை அமைப்பாக மாறியுள்ள அ.தி.மு.கவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘இடைத்தேர்தல்களில் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாகப் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.கவும் , நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட இந்தத் தொகுதிகளில் தி.மு.க அணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.

எனவே இந்தத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்பது உறுதி. மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளாலும் கடுமையான பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் நடப்பது பா.ஜ.கவின் மறைமுக ஆட்சிதான்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை பா.ஜ.க ஆளும் மாநிலங்களை முந்திக்கொண்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது இதற்கொரு சான்றாகும். அ.தி.மு.க அமைச்சர்கள் தமது தலைவர்களைப் பற்றிப் பேசுவதைவிட பா.ஜ.க தலைவர்களைப் புகழ்ந்துபேசி அவர்களிடம் நற்சான்று பெறுவதிலேயே குறியாக உள்ளனர். இவற்றையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.கவின் துணை அமைப்பாக மாறிவிட்ட அ.தி.மு.கவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி’ என்று குறிப்பிட்டுள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...