அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வாரிசு: திரைவிமர்சனம்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   11 , 2023  18:03:15 IST


Andhimazhai Image

சினிமா ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக இன்று வெளியாகியிருக்கிறது வாரிசு திரைப்படம்.
குடும்ப செண்டிமெண்டை தெலுங்கு வாசமும் டிவி சீரியல் மசாலாவும் மணக்க மணக்க பரிமாறி இருக்கிறார்கள்.

 
மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமாருக்கு (ராஜேந்திரன் பழனிச்சாமி) ஸ்ரீகாந்த் (ஜெய்), ஷாம் (அஜய்) விஜய் (விஜய் ராஜேந்தர்) என மூன்று மகன்கள். இதில் கடைக்குட்டியான விஜய், தந்தையின் எண்ணத்திற்கு மாறாக செயல்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். சந்தர்ப்ப சூழல் காரணமாக அவர் மீண்டும் திரும்பி வர குடும்பமே சிக்கலில் இருக்கிறது. இதை சரி செய்ய விஜய் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

 
கஷ்டங்களோடு குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் அம்மா, எல்லோரையும் உதாசீனப்படுத்தும் அப்பா, பேராசை கொண்ட அண்ணன்கள், திசைமாறும் இளம் பெண் என ஒவ்வொருவரின் பிரச்னைகளையும் மேலோட்டமாக தொட்டுச் செல்கிறது படத்தின் திரைக்கதை. இயக்குநர் வம்சி பைடிபள்ளிக்கு திரைக்கதையில் கூடுதலாக உதவியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக். இவரே படத்தின் வசனகர்த்தா.

 
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பட்டதாரியாக வரும் விஜய் வழக்கம் போல் நடன அசைவுகளால் மிளிர்கிறார். ஆக்‌ஷன் மற்றும் காதல் காட்சிகளில் அசரடிக்கிறார். படத்தை விட பாடல் காட்சிகளின் போதே அரங்கம் ஆர்ப்பரித்து. சில இடங்களில் அவரின் முகபாவனைகள் படத்தை உயிர்ப்புடன் வைக்கிறது.

 
நாயகன் இருந்தால் நாயகி இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி போல, ராஷ்மிகா மந்தனா பாடலுக்கும் காதலுக்கும் மட்டுமே வந்து செல்கிறார். சரத்குமாரின் நடிப்பு அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கிறது. முதல் பாதியில் மிடுக்காகவும், இரண்டாம் பாதியில் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கே உண்டான மென்சோகத்துடன் நடித்திருக்கிறார். அதேபோல், விஜய் அம்மாக நடித்திருக்கும் ஜெய சுதா கச்சிதமாக நடித்திருக்கிறார். இதுதவிர வில்லன் பிரகாஷ் ராஜ், குடும்ப மருத்துவராக வரும் பிரபு, யோகிபாபு, அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷாம், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா என பெரிய நடிகர் பட்டாளமே இருந்தாலும் எந்த கதாபாத்திரமும் மனதில் பதியவில்லை.

 
விஜய் படத்திற்கு ஏற்ற பாடல்களை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் தமன். ஆராரி ஆரிரோ, ரஞ்சிதமே,  தீ தளபதி பாடல்கள் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும், பிரவீன்கே.எல் படத்தொகுப்பும் ஓகே.

 
சாவு கேட்கிற கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை. நேரம்,பயணம், பசி இதை மூன்றையும் மனிதர்களால் தவிர்க்க முடியாது என்பது போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கிறது.

 
குடும்பங்கள் கொண்டாடும் அளவிற்கு உணர்ச்சிவயமிக்க காட்சிகள் எடுபடாமல் போவது, கதை சென்னையில் நிகழ்வது போல் காட்டினாலும் தெலுங்கு வாசம் வீசுவது, படத்தின் நீளம் ஆகியவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

 
திரைக்கதையின் பலவீனத்தை விஜய்யின் துள்ளலும் எள்ளலும் ஈடு செய்யுமா என்பது சந்தேகமே!



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...