???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழி திணிப்பை அதிமுக அரசு ஏற்காது: அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0 எஸ்.பி.பி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை: எஸ்.பி.பி சரண் விளக்கம் 0 மனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன்: அனில் அம்பானி 0 திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு 0 புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு 0 அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது! 0 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் 0 வேளாண் திருத்த மசோதா சட்டமானது! 0 ராஜிவ் காந்தி சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு 0 பஞ்சாப்பில் விவசாயிகள் 3-வது நாளாக ரயில் மறியல் போராட்டம் 0 திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை: போலீசார் விசாரணை 0 பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி 0 தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று 0 ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பொருள் இருப்பு அதிகம் வைத்திருக்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அபராதம்: தமிழக அரசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வனிதா விஜயகுமாருக்கு திருமணம்!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   18 , 2020  05:21:06 IST


Andhimazhai Image

நடிகை வனிதா விஜயகுமார் மறுமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். பீட்டர் பால் என்பவருடன் அவருக்கு திருமணம்  நடக்க உள்ளது. வனிதா 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007இல் விவாகரத்துப் பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007இல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 2010இல் முடிவுக்கு வந்தது.

 

இந்நிலையில்தான் பீட்டர் பால் என்பவரை தான் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக வனிதா அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “

 

இந்த ஆண்டு எனக்கு வயது நாற்பதை நெருங்குகிறது. இந்த கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு நமது வாழ்க்கை குறித்த அதிக புரிதல்களையும், நமக்கான முன்னுரிமைகளையும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

 

பீட்டர் பால்...அவர் என்னுடைய கனவிலிருந்து வெளியேறி என் வாழ்க்கையில் நுழைகிறார். எனக்கே தெரியாத வெற்றிடத்தை நிரப்பியுள்ளார். என் வாழ்வில் ஒரு நண்பராக வந்த அவர், ஊரடங்கின் போது என்னுடைய யூ டியூப் சேனலின் தொழில்நுட்ப பிரச்சினைகளைச் சமாளிக்க எனக்கு உதவி செய்தார். என்னை திருமணம் செய்துகொள்ள  அவர் கேட்டபோது எனக்கு வார்த்தைகள் வரவில்லை.

 

என் குழந்தைகளிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று கூறினேன். அவர்களும் இதற்கு ஒப்புதல் தந்தபோது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.”என உருக்கமாகக் கூறிஉள்ளார்.  திருமணம் முடிந்தபின்னர் படங்களையும் காணொலிக் காட்சிகளையும்வெளியிடுவதாகக் கூறிஉள்ளார்.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...