???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மீண்டும் சிக்கலில் வானவராயன்வல்லவராயன்.

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   31 , 2014  23:50:20 IST

 பெயர் சிக்கல் தயாரிப்பாளர் மாற்றம் ஆகியனவற்றைக் கடந்து கடந்த மாதம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்ட வானவராயன்வல்லவரான் படம் மறுபடியும் சிக்கலில் மாட்டிக்கொண்டதாம். இந்தப்படத்தை மொத்தமாக ஐந்தாரைகோடி கொடுத்து மருத்துவர் சிவபாலன் என்பவர் வாங்கிவிட்டார். இதனால் படம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்று அவரையும் சேர்த்துகாண்டதால் ஐந்தரைக்கோடியையும் தாண்டி அவர் செலவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாம். இதனால் விழித்துக்கொண்ட சிவபாலன், கொடுப்பதாக ஒப்புக்கொண்ட ஐந்தரையிலும் பாக்கி வைத்துவிட்டாராம். இதனால் படத்தைத் திட்டமிட்டபடி வெளியிடமுடியாது அதனால் நட்டம் வரும் என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரோ, படம் இந்த தேதியில் வெளியாகும் என்று விளம்பரம் செய்துவிட்டு அதன்பின் தள்ளி வைத்தால் கதாநாயகனுக்குத்தான் பெரியநட்டம். அதன்பின்தான் என்னுடைய நட்டம் என்று சொல்லிவிட்டாராம்.

 

இதனால் நாயகன் கிருஷ்ணாவும் அவருடைய அப்பா பட்டியல்சேகரும் நொந்துபோய்விட்டார்களாம். பேசியபணத்தைவிடக்கூடுதலாக அவரிடம் பிடுங்கிவிடலாம் என்று திட்டம் போட்டவர்களுக்குப் பேசியபணமே வந்து சேரவில்லை என்றால் எப்படி இருக்கும்? ஆனாலும் சோர்வுறாமல் சிவபாலனிடம் பேசியிருக்கிறார்கள். அவரோ நான் இப்போது கொடுத்திருக்கும் இரண்டுகோடியை வைத்துப் படத்தை வெளியிடுங்கள், படம் வெளியான பிறகு மற்றவற்றைப் பேசிக்கொள்வோம் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். இதனால் பேசியபணத்தை மொத்தமாகத் தரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள்சங்கத்தில் புகார் செய்துவிட்டாராம் பட்டியல்சேகர். அங்கு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகச்சொல்கிறார்கள்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...