அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வாய்தா: திரைப்பட விமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   மே   28 , 2022  12:39:33 IST


Andhimazhai Image

சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த முதியவர் ஒருவரின் விபத்தில் தொடர்புடைய ஆதிக்க சக்திகள் நடத்தும் நயவஞ்சக விளையாட்டே 'வாய்தா' திரைப்படம்.

அறிமுக இயக்குநர் மகிவர்மன் சி.எஸ் இயக்கியுள்ள திரைப்படம் 'வாய்தா'. படத்தின் கதை சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் நடக்கிறது. சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த மு.ராமசாமியை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தால் இடித்துவிடுகிறார். இதனால், அந்த முதியவருக்கு வலது கை உடைந்து விடுகிறது. இந்த விபத்து சம்பத்தில் இருவருக்குத் தொடர்பிருக்கிறது. அந்த இருவருக்கும் இருக்கும் ஈகோ பிரச்சனையால் விபத்து சம்பவம் பெரிதாகிறது. விவகாரம் காவல் துறை, நீதிமன்றம் வரை செல்கிறது. பெரியவர் பகடைக் காயாக்கப்படுகிறார். நீதிமன்றத்தின் வாய்தா அவர்களை பாடாய் படுத்த,  இறுதியில் அந்தப் பெரியவருக்கு விபத்திற்கான இழப்பீடு கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள், கீழ் சாதி மக்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், வழக்கறிஞர்கள் எப்படி நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுகிறார்கள், நீதித்துறை எப்படி பலவீனமாகவும் இருக்கிறது என்பதை சொல்லத்துணிந்த இயக்குநருக்கு சினிமா மொழி கைகூடவில்லை. இது படத்தின் பெரும் பலவீனம்.

நாயகனாக புகழ் மகேந்திரனும் நாயகியாக ஜெசிகாவும் நடித்துள்ளனர். நாயகி காதல் காட்சிகளிலும், நாயகன் கோபமடையும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இருவருக்கும் இது முதல் படம்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் மு.ராமசாமியின் நடிப்பு அசர வைக்கிறது. உடைந்த வலது கையை மடக்கி வைத்துக் கொண்டு பேசும் காட்சியிலும், மனதுக்குள்ளேயே புலம்பிக் கொள்ளும் காட்சியிலும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். நாசர் குறைந்த காட்சியில் வந்தாலும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆதிக்க சாதி கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்திற்கு லோகேஸ்வரன் இசை பெரும் பலம். ‘ஏனிந்த ஏனிந்த ஆனந்தம்’, ‘வாய்தா…வாய்தா’,  ‘பார்வை வண்ண நூலை’, ‘எளியோர் மனம்’ போன்ற பாடல்கள் கதைக்கு ஏற்றவாறும் ரசிக்கும் படியாகவும் உள்ளது.

தொலைவுக் காட்சிகளை அழகாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் சேதுமுருகவேல் அங்காரகன் நடிகர்களை நெருக்கமாகப் படம் பிடித்ததில் சறுக்கியிருக்கிறார்.

‘வாய்தா’ சரியான திரைக்கதையாக பின்னப்பட்டிருந்தால், தமிழில் முக்கியமான படமாக வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...