???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிடர் கொண்ட சிங்கமே... வைரமுத்து கவிதை

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   04 , 2018  23:38:23 IST


Andhimazhai Image
திமுக தலைவர் கலைஞரை சந்தித்து கவிஞர் வைரமுத்து வாசித்துக்காட்டும் இந்த  கவிதை காணொளி கலைஞர் மீது அன்பு கொண்டபலரையும் கவர்ந்துள்ளது. பாஜக அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் இருப்பதாக வைரமுத்து குறிப்பிட்டு திராவிட சிந்தனையாளர்களால் விமர்சனத்துக்குள்ளானார். பின்னர் ஆண்டாள் பற்றிக் கூறிய கருத்தால் பாஜக சார்ந்தவர்களால் எதிர்ப்பை சந்தித்த வைரமுத்து  இந்த கவிதையின் மூலம் மீண்டும் திராவிட முகாமைச் சார்ந்தவர்களைச் சாந்தப்படுத்தியிருக்கிறார்.  இதை திமுக பிரமுகர் எம்.எம் அப்துல்லா எழுதியுள்ள முகநூல் குறிப்பு உணர்த்துகிறது:
 
கேள்வி : திராவிடத்தின் அவசியம் ஒருவரால் எப்போது உணரப்படும்?
 
பதில் ; நட்டு வைத்த வேல் பொட்டென பொடனியில் குத்தும் போதும் அரக்கர் குல தலைவனை கவிதையால் அர்ச்சனை செய்து உணரப்படும்.
 
வைரமுத்துவின் அந்த கவிதை வரிகள் கீழே. (காணொளி இங்கே)
 
 
பிடர்கொண்ட சிங்கமே பேசு
 
இடர்கொண்ட தமிழர் நாட்டின்
 
இன்னல்கள் தீருதற்கும்
 
படர்கின்ற பழைமை வாதம்
 
பசையற்றுப் போவதற்கும்
 
சுடர்கொண்ட தமிழைக்கொண்டு
 
சூள்கொண்ட கருத்துரைக்கப்
 
பிடர்கொண்ட சிங்கமே நீ
 
பேசுவாய் வாய் திறந்து
 
யாதொன்றும் கேட்க மாட்டேன்
 
யாழிசை கேட்க மாட்டேன்
 
வேதங்கள் கேட்க மாட்டேன்
 
வேய்ங்குழல் கேட்க மாட்டேன்
 
தீதொன்று தமிழுக் கென்றால்
 
தீக்கனல் போலெழும்பும்
 
கோதற்ற கலைஞரே நின்
 
குரல் மட்டும் கேட்க வேண்டும்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...