செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
முதலமைச்சருடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு
தமிழக எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பி ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டும் என, மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
முதலமைச்சருடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு
Posted : வெள்ளிக்கிழமை, மே 13 , 2022 22:40:55 IST
தமிழக எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பி ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டும் என, மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்ததாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோருடன் சேர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை வைகோ சந்தித்தார்.
30 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவியது பாராட்டத்தக்கது என்றார். ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் துன்பத்திலிருந்து அவர்களை படிப்படியாக விடுவிக்க, மத்திய அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததாகவும் பேசினார்.
தமிழகம் வழங்கும் நிவாரணப் பொருட்கள் ஈழத்தமிழர்களுக்கு விநியோகிக்கப்படுவதை கண்காணிக்க, தமிழக அரசு அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறியதாக வைகோ தெரிவித்தார்.
|