???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீதிமன்றம் மூலமாக விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவோம்: வைகோ

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   17 , 2019  23:40:05 IST

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது.

தற்போது தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின் ஜூலை 26-ம் தேதி டெல்லியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் அடுத்த கருத்து கேட்பு கூட்டம் இரண்டாவது நாளாக சேப்பாக்கம் அரசினர் புதிய விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

இதில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு தவறானது என்று சொல்லக்கூடியவர்கள் அதற்கான விளக்கத்தை அளிக்கும் விதமாக நீதிபதி சங்கீதா திங்கரா சேகல் அமர்வில் கருத்து கேட்பு நடைபெற்றது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வழக்கு முடிவில் என்னுடைய வாதங்களை வைக்க அனுமதி கொடுத்தார்கள். 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மதுரையில் வழக்கு தொடரும் என்று நீதிபதி கூறினார்.

உச்சநீதிமன்றம் சென்று இந்த வழக்கை உடைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று வைகோ தெரிவித்தார்.

மேலும், செப். 15-ல் மதிமுக மாநாட்டில் பரூக் அப்துல்லா கலந்து கொள்கிறார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது. எங்கள் மாநாட்டில் பரூக் அப்துல்லா நிச்சயம் கலந்து கொள்வார் எனவும் வைகோ பேசியுள்ளார்.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...