???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   19 , 2020  22:40:05 IST

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, செய்தித்தாள்கள் அச்சிடுதல் மற்றும் விற்பனைத் தொழிலில் ஏற்பட்டுள்ள  இழப்புகளைக் கவனத்தில் கொண்டு, சுங்க வரிக் குறைப்பு செய்யுமாறு கேட்டு  அச்சு ஊடகங்களின் சார்பில், அரசுக்குக் கோரிக்கை வந்துள்ளதா எனவும், அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசின் விளக்கம் என்ன? என்றும் வானொலிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைக் கவனத்தில் கொண்டு, உரிமக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுமா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விளக்கம் தருக?என கடந்த 14ஆம் தேதி கேள்வி எழுப்பியிருந்தார்.
 
அதற்கு செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். மார்ச், ஏப்ரல் மாதங்களில், இந்திய அச்சு ஊடகக் குழுமங்களிடம் இருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன என்றும் வருவாய் இழப்பு காரணமாக, அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு இருக்கின்ற கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு  5 விழுக்காடு அடிப்படை சுங்க  வரியை நீக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார்கள் எனவும், இதுகுறித்து, நிதி அமைச்சகத்துடன் கலந்து பேசி, உரிய முடிவு  எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் கோவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தனியார் பண்பலை வானொலிகளுக்கு, 2020/21 ஆம் ஆண்டுக்கான, முதல் மூன்று மாத கால உரிமத் தொகைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...