![]() |
அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கைPosted : புதன்கிழமை, ஜனவரி 13 , 2021 22:40:33 IST
சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
காட்டுப்பள்ளியில் 2012-ல் இருந்து இயங்கி வரும் சிறிய துறைமுகம் 330 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதனை 6 ஆயிரத்து110 ஏக்கர் அளவுக்கு விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் திட்டமிட்டு சுற்றுசூழல் துறையின் தடையின்மை சான்று கேட்டு அதானிக்குழுமம் விண்ணப்பித்துள்ளது.
இந்த நிலையில் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள் எனவும் வைகோ எச்சரித்துள்ளார்.
|
|