???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின் 0 எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ் 0 துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் 0 இஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து 0 டிடிவி ஆதரவாளர்கள்: 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம் 0 செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு 0 தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என் உயிரினும் மேலான உடன்பிறப்பே : முரசொலி பவள விழாவில் வைகோ ஆற்றிய உரை.

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   06 , 2017  02:51:54 IST


Andhimazhai Image

ஏறத்தாழ பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவின் மேடையில் வைகோ. உயர்ந்தன பல புருவங்கள், எழத் தொடங்கிவிட்டன பல அரசியல் ஆரூடங்கள். அவையெல்லாம் இருக்கட்டும். எல்லா வகை பேதங்களையும்தாண்டி, தமிழக அரசியலில்  கலைஞர் வைகோ இருவரின் நட்புக்கு எப்போதும் ஒரு தனியிடம் உண்டு.

முரசொலி பவள விழாவில் வைகோ ஆற்றிய உரையின் சுருக்கம்..

 

“அண்ணன் கலைஞர் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிற வேளையில் நான் உரையாற்றி இருக்கிறேன். தற்போதும் கலைஞர் மேடையில் அமர்ந்திருப்பதாக மானசீகமாகக் கருதிக்கொண்டு பேசுகிறேன். கோபாலபுரத்திலுள்ள அந்தக்குரல் ஒருநாள் மேடையில் ஒலிக்கும். என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே என்ற குரல் மீண்டும் ஒலிக்கும். அந்த நம்பிக்கையில் என் உரை காற்றைக் கடந்து அவரின் செவிகளிலே விழுந்து இதயத்தை ஊடுருவும் என்ற நம்பிக்கையோடு பேசுகிறேன்.

 

வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் முரசொலி விழா நடைபெறுகிறது. 1954 ஜூலை 15 மும்முனை போராட்டத்தை நினைவூட்டும் நாள். கலைஞர் எழுதிய கட்டுரைக்கு, சேரன் செங்குட்டுவன் தீட்டும் சிலப்பதிகாரம் என்று அண்ணா தலைப்பிடுகிறார். அப்படி அண்ணாவின் எல்லையற்ற அன்பைப் பெற்றிருந்தவர் கலைஞர். முரசொலியை கலைஞர் நாளேடாக்குகிற நாள் செப்டம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள். இப்படிப் பல வரலாற்றுச் சிறப்புகள் கொண்டது முரசொலி.

 

நெருக்கடி நிலை பிரகடன சமயத்தில் திமுக செயற்குழுவில் கலைஞர் நிறைவேற்றியது போல எந்தத் தீர்மானமும் எந்த அரசியல் கட்சியும் இதுவரை நிறைவேற்றியதில்லை. நம்பூதிரி பட் ‘இந்தியா ஓர் அடிமை நாடு, இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகிறதென்று இந்த தீர்மானத்தை படித்துவிட்டுச் சொன்னார்.

 

தம்பி வா தலைமை ஏற்க வா என்று அண்ணா எப்படி நாவலரை அழைத்தாரோ அதேபோல கோவையில் நடைபெற்ற மாநாட்டில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசும்போது, ‘அண்ணாவின் தூங்காத இதயமே வா’ என்று அழைத்தார். அதுதான் மாநாட்டின் உச்சக்கட்ட உரை. நெருக்கடி நிலையில் நாங்கள் சிறையில் இருந்தபோது எங்களுக்கு முரசொலி பத்திரிகை ஆறு நாள்கள் கழித்துதான் வரும். எமர்ஜென்சியின்போது அண்ணாவைப் பற்றி ‘என் அன்னையை விட அண்ணா அவர்கள் என்னிடம் அன்பை பொழிந்தார்கள்’ என்று எழுதியதை அனுமதிக்க தணிக்கை அதிகாரிகள் திமிராக மறுத்துவிட்டனர். உடனே அவர்களை எதிர்த்து சென்சார் அலுவலகம் எதிரே போராட்டம் அறிவித்தார்.

 

வீட்டிலிருந்தபடியே துண்டுப் பிரசுரங்கள் தயாரிக்கிறார். மறுநாள் அந்த துண்டுப் பிரசுரங்களை தேனாம்பேட்டையில் விநியோகிக்கிறார். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்குதான் ‘ஜனநாயகம் வாழ்க, சர்வாதிகாரம் வீழ்க’என்று முழக்கம் எழுப்பினார். மொரார்ஜி தேசாய் உள்பட பலரைக் கைது செய்ய அஞ்சாத இந்திராகாந்தி அரசு, கலைஞரை கைது செய்ய அஞ்சிய காரணத்தால் காலையில் கைது செய்து மாலையில் விடுதலை செய்தது” என்று கலைஞருடனான தனது அனுபவங்கள் குறித்துப் பேசிய வைகோ, பொடாவில் இருந்து  தான் வெளியே வரும் நேரத்தில், “பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியே வா” என்று கருணாநிதி எனக்காக முரசொலியில் எழுதியதை என்னால் மறக்க முடியாது' என்று உருக்கமாக உரையாற்றினார்.  இறுதியாக “கலைஞர் அவர்கள் நூற்றாண்டு கடந்த வாழ வேண்டும். மீண்டும் கலைஞர் உரையாற்றுவதைத் தமிழ்ச் சமூகம் காண வேண்டும்” என்று முத்தாய்ப்பாகக் கூறி முடித்தார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...