???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக்கோாி தி.மு.க சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸை நிராகரித்தது ஏன்: வெங்கயைய நாயுடு விளக்கம் 0 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: துணை பேராசிரியர் முருகன் கைது 0 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை நேரில அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம் நிராகாிப்பு 0 ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது! 0 மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக யெச்சூரி மீண்டும் தேர்வு 0 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் 0 இரண்டு இந்தியர்களுக்கு புலிட்சர் விருது! 0 நிர்மலா தேவிக்கு சாதகமாக செயல்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 0 வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் 0 மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு! 0 நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் தலைமறைவு 0 பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற மாநாட்டில் தீ விபத்து 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்த வைகோவின் மைத்துனர் மகன்

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   13 , 2018  01:12:02 IST


Andhimazhai Image
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பிரமுகர் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் மைத்துனர் சரவண சுரேஷ் இன்று அதிகாலை தீக்குளித்தார். கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிக்கை :
 
 
என்னுடைய துணைவியார் ரேணுகாதேவி அவர்ளின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜம் அவர்களின் மகன் சரவண சுரேஷ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுகின்றவன். தேர்தல் காலங்களில் எல்லாம் என்னுடனேயே இருப்பான். பட்டதாரியான அவன் மிக அமைதியானவன். அனைவரையும் அன்போடு நேசிக்கும் உயர்ந்த பண்பாளன். என் துணைவியாரின் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளிலேயே நான் மிக மிக நேசித்தது சரவண சுரேஷைத்தான்.
 
 
சரவண சுரேசின் திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். அவனது மூத்த மகன் ஜெயசூர்யா மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.
 
 
கழக நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் வந்து எனது உறவினன் என்று காட்டிக்கொள்ளாமலும், முன்னிலைப்படுத்திக் கொள்ளாமலும் கட்சி நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தான். கடந்த சில நாட்களாக நான் நியூட்ரினோ நடைப்பயணம் மேற்கொண்டபோதும், அங்கும் வந்தான்.
 
 
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து நேற்று நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாகவே இருந்திருக்கிறான். ஆசிரியையாகப் பணியாற்றும் அவனது துணைவியார் அமுதா, “ஏன் கவலையாகவே இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “மாமா பேச்சைக் கேட்டு மனசே சரியில்லை” என்று சொல்லி உள்ளான்.
 
 
இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை அருகே உடல் எங்கும் மண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டான். உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்பொழுது மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிறார்கள். உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்?
 
 
நேற்று இரவு திமுக செயல் தலைவர் சகோதரர் ஸ்டாலின் பங்கேற்ற கடலூர் பொதுக்கூட்டத்தில், “இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.
 
 
இன்று என் குடும்பத்துப் பிள்ளையே காவிரிக்காக தீக்குளித்தான் எனும்போது, என்னை நான் தேற்றிக்கொண்டாலும், சரவண சுரேசின் பெற்றோருக்கும், என் துணைவியாருக்கும் உறவினர்களுக்கும் எப்படி தேறுதல் கூற முடியும்? என் பொதுவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. நொறுங்கிப்போன இதயத்தோடு யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று மீண்டும் கரம்கூப்பி வேண்டுகிறேன்.
 
 
 
✍வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.04.2018


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...