???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   13 , 2018  03:45:38 IST

ஆண்டாள் பிரச்சினை தொடர்பாக வைரமுத்துவை மிரட்டலாம், ஊறுவிளைவிக்கலாம் என்று எவரும் கனவு காண வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களை தந்த படைப்பாளி வைரமுத்து என்று வைகோ குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் போன்ற புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறிமுறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்தரித்தவை என அவர் தெரிவித்துள்ளார். ஆண்டாளையும் அவர் தந்த பாடல்களையும் மிக உன்னதமாக சித்தரித்து, மணிமுடி வேந்தர்களின் அரணாக வளர்ந்த ஆண்டாள், தமிழ் மொழியையே ஆட்சி புரிந்தாள் என்று தலைப்பிட்டு எழுதியதாக வைகோ குறிப்பிட்டுள்ளார். விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தும் வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும், தினமணி நாளேட்டை அச்சுறுத்துவதும் மிகவும் கண்டனத்திற்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார். வைரமுத்துவை மிரட்டலாம் என்றோ, அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவு காண வேண்டாம் என்றும் வைகோ எச்சரித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...