???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை நிலச்சரிவு: மலையகத் தமிழர்களை மீட்டு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ள வைகோ கோரிக்கை

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   31 , 2014  02:42:10 IST

இலங்கை நிலச்சரிவு தொடர்பில், மலையகத் தமிழர்களை மீட்டு அவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள மீரிய பெத்தை எனும் இடத்தில் மழையின் காரணமாக அக்டோபர் 29 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200 தமிழர்கள் புதையுண்டு உயிர் இழந்தனர்; மேலும், 500 தமிழர்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன. கொலந்தை பகுதியில் பெருமளவு வீடுகள் இடிந்து போயிருக்கின்றன. மலையகத் தமிழர்கள் வாழும் தேயிலைத் தோட்டக் குடியிருப்புத் தமிழர்கள் மண் சரிவு அபாயம் உள்ளவை என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் எச்சரித்து இருந்தது. ஆயினும், தேயிலைத் தோட்டங்களில் வாழும் மலையகத் தமிழர்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி தேயிலை, காபி தோட்டங்களை உருவாக்கியவர்கள். கடும் உழைப்பைக் கொடுத்து இன்றும் இலங்கையின் வளமான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள்.
 
அவர்கள் பல தலைமுறைகளாக மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த போதிலும், 1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு கொண்டு வந்த குடிஉரிமைச் சட்டத்தாலும், 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி- லங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தாலும் பத்து இலட்சம் பேர்களது குடிஉரிமை பறிக்கப்பட்டு, நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். உலகிலேயே வேறு எங்கும் இந்தக் கொடுமை நடக்கவில்லை. இலங்கை அரசின் வஞ்சகத்தாலும், பாரபட்சமான அணுமுறையினாலும் வாழ்வுரிமைகளை இழந்த மலையகத் தமிழர்களை இயற்ககையும் வஞ்சிக்கின்றது.நிலச்சரிவில் சிக்கியுள்ள மலையகத் தமிழர்களை மீட்கவும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...