???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 0 முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! 0 எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு 0 பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி! 0 அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி முகம்: மாலையில் இறுதி அறிவிப்பு 0 நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை 0 சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும்: கி.வீரமணி 0 இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை 0 சபரிமலைக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நதிநீர் பிரச்சனைகளை கையாள ஒரே தீர்ப்பாயம்: வைகோ எதிர்ப்பு

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   11 , 2019  04:37:16 IST


Andhimazhai Image

நதிநீர் பிரச்சனைகளை கையாள ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

வைகோ வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

 

பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நேற்று (10.07.2019) நடைபெற்ற மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் ஏற்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவு கொண்டுவர ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

அனைத்து நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மத்திய அரசு ஒரே தீர்ப்பாயத்தை அமைக்கும் என்று மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர் 2016 டிசம்பரில் கருத்துக் கூறியபோதே அதனைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டேன்.

 

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956 இல் திருத்தம் செய்து, புதிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு வருகிறது.

 

இந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சினைகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா ஆகிய நதிநீர் பிரச்சினைகளுக்கு நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு 50 ஆண்டு காலம் ஆகின்றன. ரவி, பியாஸ் நடுவர் மன்றம் 33 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் 29 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.  குறிப்பாக, தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதனை இன்று வரை தீர்க்க முடியவில்லை.

 

இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்பு தனித் தனி நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டும், நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படவில்லை. நடைமுறையில் உள்ள இந்தச் சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல், ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முயற்சி பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது.

 

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் சட்டப்படியும், நியாயப்படியும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மேலாண்மை ஆணையம் என்று பெயருக்கு ஒரு அமைப்பை உருவாக்கியது.

 

ஆனால் இந்த ஆணையத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுகிற அதிகாரம் இல்லை என்பதை நடைமுறையில் பார்க்கிறோம். இந்நிலையில், மத்திய அரசின் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு இன்னும் பல ஆண்டுகளுக்கு நதி நீர் பிரச்சினையை நீடிக்கவே வழி செய்யும்.

 

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ்நாடுதான் என்பதை உணர்ந்து, தமிழக அரசு இந்தச் சட்ட முன் வடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு நதி நீர் சிக்கல்களுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...