???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்! 0 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து! 0 லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 0 பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்! 0 நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி 0 நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் 0 CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் 0 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை! 0 விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 0 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் 0 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு 0 புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   21 , 2018  07:00:39 IST

தமிழகத்தில் அமைய உள்ள பசுமை வழிச் சாலை திட்டத்தை உடனடியாக மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:  ''சென்னை-சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திட தமிழக அரசு முனைந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பெரும் நாசத்துக்குள்ளாகும். தமிழக மக்கள் எந்த வளர்ச்சித்திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் வளர்ச்சி யாருக்கு? என்பதுதான் எங்கள் கேள்வி. பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல பசுமைச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல. எனவே பசுமையை அழிக்கும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இயற்கையை காக்கக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மக்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.'' இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...