???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா 0 பெண் குழந்தை பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக-வுக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின் 0 ட்ரம்புக்கு அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பதாக தகவல்! 0 இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் ! 0 யாரும் பிச்சை போடவில்லை: ஆர்.எஸ்.பாரதிக்கு திருமாவளவன் பதிலடி 0 பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து: பா.ம.க. வரவேற்பு 0 குள்ள உருவத்தைப் பார்த்து கிண்டல்: அழுத சிறுவனை உலகமே அணைத்து ஆறுதல் சொன்னது! 0 NPR-ல் விஷமத்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன: ப.சிதம்பரம் 0 பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண் தலைக்கு ரூ.10 லட்சம்: ஸ்ரீராம் சேனா 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   14 , 2020  20:42:29 IST

தமிழகத்தின் கடன் சுமை, சுமார் 5 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் இந்த அரசின் சாதனை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.  

இது தொடர்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், 2011 ஆம் ஆண்டில் அதிமுக அரசு பொறுப்பேற்ற போது, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 610 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, சுமார் 5 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் இந்த அரசின் சாதனை.

மத்திய வரி பங்கீட்டில் தமிழகம் பெரும் இழப்புக்கு ஆளாகி உள்ளது. மேலும் வருவாய் பற்றாக்குறை 22 ஆயிரத்து 226 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஆதாரம் எங்கே இருக்கிறது? மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து திட்டவட்டமான கருத்தை முன் வைக்காமல், நீட் தேர்வைத் திணித்தது போல புதிய கல்விக் கொள்கையையும் செயல்படுத்த அதிமுக அரசு முனைந்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் மூடப்பட்டு வரும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பதை அதிமுக அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை.

2016 இல் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றபோது, டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அரசு குப்பைக் கூடையில் வீசி எறிந்துவிட்டது. ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை எனும் பாஜக அரசின் திட்டத்தை அறிவித்திருப்பது பொதுவிநியோக முறையையே சீர்குலைத்துவிடும்.

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம், அயலகத் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கை அமைத்தல், பணிபுரியும் பெண்களுக்கு 13 இடங்களில் அரசு விடுதிகள், கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி போன்ற வரவேற்கத்தக்க அறிவிப்புகள் தவிர, தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் மொத்தத்தில் ஏமாற்றமே அளிக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...