???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உதயநிதி ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   05 , 2019  02:17:03 IST


Andhimazhai Image

திமுகவின் இளைஞர் அணி செயலாளராக  நியமிக்கப்பட்ட  உதயநிதி ஸ்டாலினுக்கு  வைக்கோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் அணி என்ற புதிய அமைப்பை, அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். அந்த அணியைக் கட்டமைக்கும் பணியை, தளபதி ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொண்டு, தமிழகம் முழுமையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வலுவுள்ள அமைப்பாக வார்ப்பித்தார்.   

 

கடுமையான உழைப்பாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாலும்,   தளபதி ஸ்டாலின் அவர்கள் கட்டி எழுப்பிய இளைஞர் அணி, இன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிய படைக்கருவிகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது.  இலட்சக்கணக்கான இளைஞர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்.

 

அந்த அணியின் புதிய செயலாளராக, உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்து, தி.மு.க.தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்து இருப்பதை, மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். 

 

தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கலை உலகில் தமது திறமையை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் மனங்களில் ஒரு இடத்தைப் பெற்று இருக்கின்றார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுமையும் அவர் மேற்கொண்ட பிரச்சார சுற்றுப்பயணம், மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகின்ற உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டுவார் என நம்புகிறேன். அவருக்கு  என் பாராட்டுகளையும், நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

இவ்வாறு  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...