???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம் 0 நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிமன்றம் 0 குடகு விடுதியில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை 0 இரட்டை இலை சின்னம்: விசாரணை தேதி மாற்றம் 0 பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு! 0 காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லோரும் என்.ஆர்.ஐ.தான்: ராகுல்காந்தி 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மதுவைத் தடுக்கும் மோடி, மதுவைத் திணிக்கும் லேடி- வைகோ காட்டம்

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   23 , 2014  03:49:46 IST


Andhimazhai Image
 
 
மதுரை சிலைமான் பகுதியில் இருந்து கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி பிரச்சாரம் தொடங்கிய வைகோ, 31 நாள்களுக்குப் பிறகு, நேற்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நிறைவு செய்தார். அப்போது, மோடியையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட்டுப் பேசியவர், இவ்வாறு குறிப்பிட்டார்.
 
நிறைவுப் பிரச்சாத்தில் நிறையச் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால், நான் போட்டியிடுகின்ற தொகுதியில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசி விட்டு வந்து இருக்கின்றேன். 
 
எதிரிகள் கலக்கம்
 
இந்தத் தேர்தலில் நமது அணி பலமாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன். அமைந்து விட்டது. அதனால் திகில் அடைந்து கிடக்கின்றது தி.மு.க. தலைமை, அண்ணா தி.மு.க. தலைமை. அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். நான் ஒரு தொகுதியில் வேட்பாளராக இருந்தும்கூட, எங்கள் இயக்கம் போட்டியிடுகின்ற தொகுதிகள் மட்டும் அல்லாமல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, நாகர்கோவில், பெரம்பலூர், திருச்சி ஆகிய தொகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்து விட்டு வந்தேன். இன்றைக்குப் பிரச்சாரத்தின் கடைசி நாள். என்னுடைய விருதுநகர் தொகுதியில்தானே பிரச்சாரம் செய்து இருக்க வேண்டும்? இல்லை. நான் தன்னலம் அற்றவன். இந்தக் கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும்; அதற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
 
நேற்று நள்ளிரவில் கலிங்கப்பட்டிக்குப் போய்ச் சேர்ந்தேன். இன்று காலையில் பொழுது புலர்ந்ததும், என் தாயின் காலில் விழுந்து வணங்கினேன். அவரது வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அது என் வழக்கம். தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் அருமைச் சகோதரர் சதன் திருமலைக்குமார் அவர்களுக்காக திருவேங்கடம், வெள்ளாகுளம், புதுப்பட்டி, குருஞ்சாக்குளம், குருவிகுளம், ஆலங்குளம் ஆகிய இடங்களில் பேசிவிட்டு, சென்று வா, வென்று வா என்று அவரை வழி அனுப்பி வைத்தேன். 
 
அடுத்து தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் அருமைச் சகோதரர் ஜோயலுக்காக கழுகுமலை, நாலாட்டின்புத்தூர், கோவில்பட்டி லெட்சுமி நூற்பு ஆலை, தேவர் சிலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தேன். கோவில்பட்டியில் என் வாழ்நாளில் பார்க்காத அளவிற்கு எழுச்சியாகத் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் பேசிவிட்டு வந்தேன்.
 
பிற்பகலில் விருதுநகரில் இருந்து புறப்பட்டு, திருமங்கலம் தேவர் சிலை அருகில் பத்து நிமிடங்கள் , அடுத்து அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, இந்தப் பிரச்சாரப் பயணத்தை தே.மு.தி.க. வேட்பாளருக்காகப் பேசி நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இங்கே வந்து இருக்கின்றேன். இதுதான் என்னுடைய இயல்பு. கழகத் தோழர்களுக்கு இன்று ஒருநாள் முழுவதும் விருதுநகரில் பிரச்சாரம் செய்து இருக்கலாமே என்று வருத்தம். நம்பியவர்களுக்காகத் தலை கொடுப்பது எங்கள் வழக்கம். (பலத்த கைதட்டல்). 
 
இன்று மாலை ஆறு மணிக்கு மேல் பேசக்கூடாது என்பது விதி. எனவே நான் பேச மாட்டேன். ஆனால், கலைஞர் கருணாநிதி எந்த விதியையும் கடைபிடிக்க மாட்டார். திருவாரூரில் பத்தரை மணி வரையிலும் பேசி இருக்கின்றார். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டு இருக்கின்றது. ஆனால், கலைஞர் கருணாநிதி, இந்தத் தேர்தலில் மட்டும் அல்ல; கடந்த தேர்தலிலும் இப்படிப் பேசி இருக்கின்றார். 
 
பேசினால் என்ன செய்து விடுவார்கள்? தேர்தல் செல்லாது என்றுசொல்லிவிடுவார்களா? என்ற எண்ணம்தான் காரணம். அதிகாரத்தில் இருந்த ஆணவம்தான் காரணம்.
 
முல்லைப்பெரியாறு
 
நம்முடைய கேரளத்துச் சகோதரர்களான செய்தியாளர்கள் பலர் இங்கே வந்து இருக்கின்றார்கள். நான் உங்கள் யாரையும் எதிரிகளாகக் கருதவில்லை. நாம் அனைவருமே சகோதரர்கள். கேரளம், ஆந்திரம், கர்நாடகம், துளு யாராக இருக்கட்டும், மூலம் தமிழகம்தான், தமிழ்தான். இந்தத் தமிழில் இருந்துதான் கிளைத்து எழுந்தன திராவிட மொழிகள் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடினார். ஆனால், அந்தச்சகோதரர்கள் இன்று நம் தலையில் பாறாங்கல்லைப் போட்டு அழிக்க நினைக்கின்றபோது, நான் வெகுண்டு எழுந்தேன். 
 
முல்லைப்பெரியாறு அணைக்கட்டுப் பகுதியில் நீண்ட காலமாக நீர்மட்டம் உயர்த்தப்படாததால்,  உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாததால், அங்கே பல பணக்காரர்கள் சுற்றுலா விடுதிகளைக் கட்டி விட்டார்கள். ஐந்து நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு மையங்களைக் கட்டி இருக்கின்றார்கள் கோடீசுவரர்கள். இப்போது அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அவை எல்லாம் மூழ்கிப் போகும்.  ஆகவேதான், அவர்கள்தான் அணையை உடைக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து இருக்கின்றார்கள். அதற்காக, அணை உடைந்தால் இலட்சக்கணக்கானவர்கள் மடிந்து போவார்கள் என்ற பொய்யான தகவலை, அவ்தார் படம் எடுத்ததுபோல, கிராபிக்Þ காட்சிகளாக ஆக்கி, ஐந்து இலட்சம் குறுவட்டுகளில் பதிந்து பரப்பினார்கள். முதல் அமைச்சருடைய இணையதளத்திலேயே ஒளிபரப்பினார்கள்.
 
அந்தப் பணக்காரர்களிடம் இருந்து என்னைத் தோற்கடிப்பதற்காகப் பணம் வந்து இருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டர் ஏடு எழுதியது. அது எனக்கு ஆதரவான ஏடு அல்ல. என்னைக் கடுமையாக நிந்திக்கின்ற ஏடு; என் முதுகில் குத்தியவர்களைத் தூக்கிப் பிடிக்கின்ற ஏடு. அவர்கள் எழுதி இருக்கின்றார்கள். வைகோ மட்டும் அல்ல, தேனி தொகுதியில் அழகுசுந்தரம்,  தென்காசியில் சதன் திருமலைக்குமார், தூத்துக்குடியில் ஜோயல் என இந்த நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்து இருப்பதாக எழுதி இருக்கின்றார்கள். நான் சொல்லவில்லை. 
 
இன்னொரு பக்கத்தில், தமிழக அரசியல் ஏட்டில் புகழேந்தி தங்கராஜ் ஒரு கட்டுரை எழுதி இருக்கின்றார். இலங்கை அரசு ஆதரவு பெற்றவர்தான் விருதுநகரில் போட்டியிடுகின்ற தி.மு.க. வேட்பாளர் என்று ஆதாரங்களோடு எழுதி இருக்கின்றார். அதனால் அந்தத் தமிழக அரசியல் ஏட்டினைப் பல இடங்களில் நேற்றைக்குத் தி.மு.கழகத்தினர் எரித்து இருக்கின்றார்கள். அந்த வேட்பாளருக்குப் புரோக்கர் வேலை பார்ப்பவர் யார்? அன்றைக்குத் தி.மு.க.காரனை வெட்டு குத்து கொல்லு என்று ஏவி விட்ட முன்னாள் அமைச்சர்தான் சொல்லுகிறார்.
 
லெனின் கொள்கையை மறந்த மார்க்சிஸ்ட்டுகள்
 
இந்த மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற நமது வேட்பாளர் சிவ. முத்துகுமார், மதுரை மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயலாளர். இந்த நாள் உலகம் போற்றுகின்ற மாமேதை லெனின் பிறந்தநாள். 1870 ஆம் ஆண்டு, இதே ஏப்ரல் 22 ஆம் நாள் அவர் பிறந்தார். இன்றைய மார்க்சிÞடுகள் லெனின் கொள்கையை மறந்து எவ்வளவோ நாள்கள் ஆயிற்று.  இல்லாவிட்டால், சுதந்திரத் தமிழ் ஈழத்தை எதிர்ப்பார்களா? தமிழ் ஈழத்தை எதிர்க்கின்ற எவராக இருந்தாலும் அவர்கள் திரிபுவாதிகள்தான் என்று சொல்லுவேன். 
 
 
வைகையில் வெள்ளம் வந்தபோது, கரை கட்ட முயன்றான் மன்னன். வந்தி கொடுத்த புட்டுக்காக மண் அள்ளிப் போட வந்தான் இறைவன். வந்த வேலையைச் செய்யாமல் ஆற்று நீரில் துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டு இருந்ததால், அவனது முதுகில் பிரம்பால் அடித்தான் மன்னன். அந்த அடி அனைவர் முதுகிலும் விழுந்தது என்ற திருவிளையாடற் புராணம் கூறுகின்றதே, அத்தகைய வெள்ளம் பாய்ந்து ஓடிய வைகையில் குடிக்கத்தண்ணீர் இல்லாமல் போகுமே? பிறகு நாம் வாழ முடியாதே. 
 
உலகத்தின் மூத்த குடிமக்கள் வாழ்கின்ற மண் இது. திருவள்ளுவரும், தொல்காப்பியரும் வாழ்ந்த மண். அறநூல்களைத் தந்த மண். இந்த மண்ணில் பிறக்கின்ற பேறு பெற்றேன் நான். என் கடமையை இந்த மண்ணுக்குச் செய்கிறேன். நான் ஒரு வேலைக்காரன் ஊழியக்காரன். என் உயிர் இருக்கின்ற வரையில், தொண்டைக்குழியில் ஜீவன் இருக்கின்றவரையில், இந்த மண்ணில் வாழ்கின்ற மக்களுக்குத் தொண்டு ஆற்றுவேன். அதனால்தான் முல்லைப்பெரியாறு அணை காக்கப் போராடுகிறேன். முக்குலத்தில் பிறந்த வீரத்தம்பி ஜெயப்பிரகாஷ் நாராயண், தமிழ் இனம் காக்க வந்த வீரக் கேடயம் என்று எனக்கு வாழ்த்துப் பத்திரம் எழுதி வைத்து விட்டு, தன் உடம்பில் பெட்ரோiலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து மடிந்து போனான். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் பிறந்த இடிமுழக்கம் சேகர் தன் உயிர் கொடுத்தான் முல்லைப்பெரியாறு அணை காக்க. விÞவகர்மா சமூகத்தில் பிறந்த இராமமூர்த்தி தன் உயிர் கொடுத்தான். ஆனால், மார்க்சிÞட் தோழர்களே, உங்களுடைய நிலைப்பாடு என்ன? அச்சுதானந்தனுக்கு லாலி பாடிக்கொண்டு இருக்கின்றீர்கள். இனியும் உங்களைப் பற்றிப் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 
 
கலைஞர் கருணாநிதி அவர்களே, நீங்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு வழக்கில் 33 வாய்தா வாங்கியது கேரளம். ஒருமுறையாவது தமிழக அரசு வழக்கறிஞர், வாய்தா கொடுக்காதீர்கள் என்று எதிர்த்தாரா? இல்லை, இல்லை, கிடையாது. கடைசியாக மூன்று நீதிபதிகள் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு கொடுக்க இருந்த நேரத்தில், கேரளத்துக்காரர்கள் நரித்தந்திரத்தோடு வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக, ஐந்து நீதிபதிகள் பெஞ்சுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரினார்கள். 
 
நரித்தந்திரம் என்று சொல்லுவதால் வருத்தப்படக் கூடாது. தென்னை மரப் பிரச்சினைக்காக பிரதமர் வாஜ்பாயிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றபோது, கேரளத்தின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டார்கள். காங்கிரÞ, கம்யூனிÞட் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் என்னிடம் வந்தார்கள். வைகோ, நீங்களும் எங்களோடு வர வேண்டும்; பிரதமரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டபோது, நான் மறுக்கவில்லை. அவர்கள்  இருபது பேர்களோடு நானும் ஒருவன் சேர்ந்து 21 பேர்களாகச் சென்று பிரதமரைச் சந்தித்தோம். அவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள். இந்த வழக்கை அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார்கள். நீதிபதிகள், தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் என்ன சொல்லுகிறார்? என்று கேட்டார். 
 
தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பராசரன், இல்லையில்லை வழக்கை நடத்தி முடித்தாக விட்டது; இங்கேயே முடித்துக் கொள்வோம் என்றார். 
 
உணவு இடைவேளை வந்தது. முதல் அமைச்சரிடம் கேட்கிறார். கலைஞர் சொல்லுகிறார்; அப்படியே ஒத்துக்கொள். வழக்கு இழுத்துக்கொண்டு போகட்டும் என்று சொல்லுகிறார். அதன்படி பிற்பகலில் நீதிமன்றத்திற்கு வந்த தமிழக அரசு வழக்குரைஞர், ஐந்து நீதிபதிகள் பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்தார். வழக்கு அரசியல் சட்ட பெஞ்சுக்குப் போய்விட்டது. அந்த வழக்கு இங்கேயே முடிந்து இருந்தால், நமக்குச் சாதமாகத் தீர்ப்பு வந்து இருக்கும். அதை எதிர்த்து அவர்கள் மேல் முறையீட்டுக்குப் போயிருப்பார்கள். நமக்கு ÞடேடÞ குவோ கிடைத்து இருக்கும். கிடைத்த நீதியை இழந்ததற்குக் காரணம் கருணாநிதி.
 
கலைஞர் கருணாநிதி அவர்களே, நீங்கள் அண்ணாவின் தம்பியா? தமிழகத்திற்குச் செய்த துரோகம் அல்லவா? பெரியார் பெயரைச் சொல்லும் தகுதி உண்டா? அண்ணா பெயரைச்சொல்ல அருகதை உண்டா?  
 
சரி இந்த வழக்கில் நம்முடைய லேடி எப்படி? அவர் ஒரு பயங்கரமான லேடி. (பலத்த சிரிப்பு). இந்த லேடி மோடியோடு மோதுகிறாராம். ஏங்க அவரோடு மோதுகிறீர்கள்? நான் ரொம்பச் சாதாரணமானவன். இரண்டு கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள் பார்ப்போம். நான் ரொம்பச் சின்னவன், நீங்கள் ரொம்பப் பலமான லேடி. நீங்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்ததே, உடனே நீங்கள் ஏன் உயர்த்தவில்லை? உயர்த்தி இருந்தால் நமக்கு ஸ்டேட்டஸ்குவோ கிடைத்து இருக்குமே?  ஏன் செய்யவில்லை? நீங்கள் பென்னி குயிக்குக்கு சிலை வைக்கின்றீர்கள். 
 
நாங்கள் உழுது பாடுபட்டு விதைத்து, நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டு, உரம் இட்டுக் களை பறித்து, பூச்சிகள் தாக்கி விடாமல் பாதுகாத்து, புதுமணப் பெண் போல் நெற்கதிர்கள் தலைசாய்ந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ந்து, அறுவடைக்கு நாள் குறித்த நேரத்தில், இரவோடு இரவாக வந்து அறுத்துக் களவாடிக்கொண்டு போகின்ற வேலையை, ஜெயலலிதா நீண்ட நாள்களாகச் செய்து கொண்டு இருக்கின்றார். 
 
நானும் கம்பம் அப்பாசும் ஊர் ஊராகப் போய் மக்களைத் திரட்டினோம். இந்த மதுரையில் மட்டும் மூன்று முறை உண்ணாவிரதம் இருந்தேன். ஐந்து முறை மறியல் செய்து இருக்கின்றோம். நடைபயணம் நடந்தேன். நான் குற்றம் சாட்டுகிறேன். முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கலைஞர் துரோகம் செய்தார்; நீங்களும் துரோகம் செய்து இருக்கின்றீர்கள். 
 
இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் அருமையான தொண்டர்கள். கட்சித்தலைமையைக் கடவுளாகக் கருதுபவர்கள். ஆனால், அந்தத் தலைமைகள் இரண்டும், நாட்டை, இனத்தைப் பாழ்படுத்தி விட்டன. இவர்கள் பிடியில் இருந்து எப்போது விடுதலை பெறுவோம்? என்று தமிழக மக்கள் ஏங்கித் தவித்தார்கள். சமய சஞ்சீவியாக நரேந்திர மோடி வந்து சேர்ந்து இருக்கின்றார். 
 
முன்பெல்லாம் என்ன செய்தார்கள்? தி.மு.க. பிடிக்கவில்லையா, கருணாநிதி பிடிக்கவில்லையா, அண்ணா தி.மு.க.வுக்குப் போடுவோம். வைகோ நல்ல மனுசன்தான். ஆனால் ஜெயிக்க முடியாதே. சரி ஜெயலலிதா பிடிக்கவில்லையா, கருணாநிதிக்குப் போடுவோம் என்று முடிவு எடுத்தார்கள். வைகோ நல்ல மனுசன்தான், ஆனால் ராசி இல்லாதவர் என்று நினைத்தார்கள். இப்படித்தான் 1972 இல் இருந்து மாறிமாறி கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இப்போது அதற்கு ஆப்பு வைத்து விட்டார் நரேந்திர மோடி. நமது அணி பலமாக அமைந்து விட்டது.
 
அதனால் எரிச்சல்பட்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா நம்மை எல்லாம் உதிரிக் கட்சிகள்; இவர்களுக்குக் கொள்கையே கிடையாது என்று பேசி இருக்கின்றார். முதல் அமைச்சர் அவர்களே வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். உங்கள் கொள்கை என்ன? கொள்ளை அடிப்பதுதான் உங்கள் கொள்கையா? 
இப்படித்தான் டாக்டர் நாவலர் அவர்களைப் பார்த்து,  தலையில் இருந்து உதிர்ந்த மயிர் என்றீர்கள். உங்களிடம் என்ன பண்பாடு இருக்கின்றது? நாங்கள் எல்லோரும் நாட்டுக்காக இரத்தம் சிந்தக் கூடியவர்கள். என்னுடைய ஒவ்வொரு தொண்டனும் உயிரைக் கொடுப்பான். எங்களைப் பார்த்து உதிரிக் கட்சி என்கிறீர்களே, இல்லை; நாங்கள் உறுதியான கட்சிகள். காலப்போக்கில் நீங்கள்தான் உதிரிக் கட்சியாகி இருக்கின்ற இடம் தெரியாமல் போகப் போகின்றீர்கள். (கைதட்டல்). 
 
கலைஞர் வேண்டுமானால் உங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் சும்மா இருக்கலாம். காரணம் உங்களைவிடத் தவறுகள் செய்தவர் அவர். எங்கள் வாழ்க்கை திறந்த புத்தகம். எங்களைப் பார்த்துக் கறை படிந்தவர்கள் என்று யாரும் குற்றம் சொல்ல முடியாது. 
 
மோடியா? லேடியா?
 
திடீரென நமது முதல் அமைச்சர் அவர்கள், மோடி ஒன்றும் சாதிக்கவில்லை; இந்த லேடிதான் சாதித்து இருக்கிறேன் என்கிறார். 
 
ஊழலுக்காக நீதிமன்றப் படி ஏறாதவர் மோடி. 
நீங்கள் ஊழல் வழக்கில் கோர்ட் படி ஏற வாய்தா கேட்கிற லேடி
அவர் மதுவைத் தடுக்கின்ற மோடி; 
நீங்கள் மதுiவைத் திணிக்கின்ற லேடி.
குஜராத்தை மின்மயமாக்கியவர் மோடி
இங்கு மின்வெட்டின் மறுபெயர் லேடி
அதுமட்டும் அல்ல, நீங்கள் ஒரு ஓ.டி.ஆகி விட்டீர்கள். 
ஆம்; ஓவர் டூப்ளிசிட்டி. தமிழகத்திற்கு ஓ.டி.யாகி விட்டீர்கள். 
மோடியை யாரும் சந்திக்க முடியும். 
ஒருவருமே சந்திக்க முடியாது இந்த லேடியை. 
 
இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஒரேயொரு குற்றச்சாட்டை வைக்கிறேன். தினத்தந்தியின் அதிபர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களுடைய அருமைத்திருமகன் சிவந்தி ஆதித்தனார், வாலிபால் விளையாட்டில் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தவர். சொந்தப் பணத்தில், இந்தியக் கைப்பந்தாட்ட அணியை உருவாக்கியவர். அவரது தந்தை புரூப் பார்ப்பார்; காக்கிச்சட்டை அணிந்த சிறுவனாக, அச்சிட்ட பத்திரிகைகளைத் தன் தலையில் சுமந்துகொண்டு போய் கடைகளுக்குப் போட்டு வந்தவர் சிவந்தி ஆதித்தனார். அப்படி வளர்ந்து சாதித்தவர். 
 
நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது உங்களைச் சந்திக்க நேரம் கேட்டார். முந்தைய தி.மு.க.ஆட்சிக்குச் செய்தி போட்டதற்காக, நீங்கள் சந்திக்க நேரம் தரவில்லை. தினத்தந்தி ஏடு எந்தக் கட்சியையும் சார்ந்தது இல்லை. யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்கள் தருகின்ற செய்திகளைப் போடுவார்கள். அப்போதும் உங்கள் செய்திகளை இரண்டாம் பக்கத்தில் போட்டார்கள். இப்போது நீங்கள் ஆட்சிக்கு வந்து விட்டீர்கள். உங்கள் செய்தியை முதல் பக்கத்தில் போட்டு, கலைஞர் செய்தியை இரண்டாம் பக்கம் போடுகிறார்கள். அவ்வளவுதான். அதற்காக ஓராண்டு அவர் முயற்சித்தும், நீங்கள் சந்திக்கவில்லை. உயர்ந்த பண்பாளர் அவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக அவரைக் கொண்டு வருவதற்காக, வாஜ்பாய் அவர்கள் மூலமாக முயற்சித்தேன். பஞ்சாப்காரர்கள் பறித்துக்கொண்டு போய்விட்டார்கள். அதற்காக, அவரது துணைவியாரோடு என் வீட்டுக்கு வந்து நன்றி தெரிவித்தார். 
 
அவருக்கு நினைவு இல்லை. மருத்துவமனையில் இருந்தார்.  யாரையும் சந்திக்க விடவில்லை. நான் மருத்துவமனைக்குச் சென்று அவரது மனைவியையும், மகனையும் சந்தித்துப் பேசி விட்டு வந்தேன். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உள்ளே கிருமிகள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக, பார்வையாளர்களை அனுமதிப்பது இல்லை. உயிரோடு இருந்தபோது அவரைச் சந்திக்க மறுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, இப்போது மருத்துவமனைக்குப் போகிறார். தினந்தந்தி அதிபரை நான் மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்தேன் என்று நாடகம் போடுவதற்காகப் போகிறார். பூட்Þ காலோடு போகிறார். உடன் சென்ற காவல் துறை அதிகாரியும் பூட்Þ காலோடு போகிறார். அதைப் பார்த்த மருத்துவர் காவல்துறை அதிகாரியிடம், சார் கொஞ்சம் அந்த பூட்சைக் கழற்றி விட்டுச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதற்காக அவரை நெருப்புப் பார்வை பார்த்தார் முதல் அமைச்சர். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், புகழ் பெற்ற வயது முதிர்ந்த அந்த மருத்துவரைக் கைது செய்து, புழல் சிறையில் கொண்டு போய் அடைத்துவிட்டார்கள். இதுதான் ஜெயலலிதா. இப்படிப்பட்டவரை மோடியோடு ஒப்பிட  முடியாது. அந்த டாக்டரின் பெயர் கருணாநிதி. ஒருகாலத்தில் தி.மு.கழகத்தின் பெரும் கருñலம் கலைஞர்தான். அவரைப் போல் இன்னொருவர் சங்கத்தமிழ் எழுத முடியுமா? குறளோவியம் தீட்ட முடியுமா? பொன்னர் சங்கர் போன்ற காவியங்களைத் தர முடியுமா? பராசக்தி, மனோகரா போன்ற வசனங்களை யாராவது எழுத முடியுமா? சுயநலத்தினால் பழிக்கு ஆளாகி விட்டார். நாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. தமிழகத்தின் வாக்காளப் பெருமக்களை இருகரம் கூப்பி வேண்டிக் கேட்கிறேன். இந்தத் தமிழகத்திற்காக நான் ஒரு துரும்பையாவது தூக்கிப் போட்டு இருப்பேன் என்று கருதுகின்ற மக்களைக் கேட்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பு இனி நமக்கு வராது. ஆதரவு தாருங்கள். 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். 
 
அழகிரியுடன் சந்திப்பு: ஆதரவுக்கு நன்றி
 
திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜனநாயகம் இல்லை என்ற போர்க்குரலை என் அருமைச் சகோதரர் அழகிரி எழுப்பி இருக்கின்றார். அன்று எம்.ஜி.ஆருக்கு நடந்தது, வைகோவுக்கு நடந்தது இன்று எனக்கு நடந்து இருக்கின்றது என்று செய்தியாளர்களிடம் அழகாகச் சொல்லி இருக்கின்றார். அவரை ஆதரிக்கின்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பாடுபட்டவர்கள். இந்த மதுரை மாநகரின் வட்டங்களில் பல ஆண்டுகளாக உழைத்தவர்கள். அவர்களது பிரதிநிதியாக முன்னாள் துணைமேயர் சகோதரர் மிசா பாண்டியன் உள்ளிட்ட பல தோழர்கள் இங்கே வருகை தந்து எனக்குக் கைத்தறி ஆடைகள் அணிவித்தார்கள். அந்தச் சகோதரர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 
 
அவர்களுடைய வட்டங்களில் உட்கட்சி ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதால், ஒன்றியக் கழகங்களில் தலையிட்டுக் குழப்பங்கள் செய்ததால், எந்தக் காரணமும் இன்றிப் பலர் தூக்கிப் பந்தாடப்பட்டதால், நியாயம் கேட்டுத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞரிடம் இது நியாயம்தானா? கட்சிக்கு உழைத்தவனைக் காரணம் இன்றி நீக்குவது சரிதானா? என்று கேட்ட நேரத்தில், அதுபற்றி விசாரிக்கிறேன்; அப்படி நடந்து இருந்தால் அது தவறுதான் என்று அவர் கூறி, அயல்நாட்டுப் பயணம் புறப்பட்ட அழகிரி அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்ப, அவர் தாய்லாந்து நாட்டுக்குப் புறப்பட்டார். 
 
அங்கே சென்று விமானம் தரை இறங்குவதற்கு உள்ளாகவே, யாருக்காக அவர் நீதி கேட்டாரோ, அவர்கள் தி.மு.கழகத்தில் இருந்தே நீக்கப்பட்ட செய்தியை அறிந்தார். பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். நாடு திரும்பியவுடன் தலைவரைப் பார்த்து நியாயம் கேட்டார். ஆனால், உன்னையும் கட்சியை விட்டு நீக்குவேன் என்று மிரட்டியபோது, கட்சியில் ஜனநாயகம் இருக்கின்றதா? என்று கேட்டார். இந்த எதேச்சாதிகாரம் இயக்கத்திற்கு நல்லது அல்லவே என்று சொன்னார்.  
 
நான் வருந்துகிறேன் கலைஞர் அவர்களே; ஒரு குடும்பத்திற்குள், அண்ணன் தம்பிகளுக்கு இடையில் ஒரு சிறிதளவு பேதம்கூட வரக்கூடாது என்று கருதுகிறவன் நான். குடும்பங்களில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். ஆனால் நீங்கள் அண்ணன் தம்பியைப் பிரிக்கின்ற வகையில் அபாண்டமாக ஒரு கருத்தைச் சொன்னபோது, அது இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு அவர்களுடைய பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளைப் பாதிக்கும் என்பதை யோசித்துப் பார்த்தீர்களா?  அவர்களுக்குள் தீராத பகை வளர்வதற்கு அந்தச் சொற்கள் காரணமாகி  விடுமே என்பதை யோசித்தீர்களா நீங்கள்? 
 
அழகிரி அவர்கள் துணிச்சல் மிக்கவர். சொன்னால், சொன்னேன் என்று சொல்லுவார். பயப்பட மாட்டார். அவர் நான் அந்த வார்த்தைகளைப் பேசவே இல்லை என்று மறுக்கிறார். நீங்கள் அபாண்டமாகப் பழி சுமத்துகின்றீர்களே? நீதி கேட்டதற்காக அவரையும் கழகத்தில் இருந்து நீக்கினீர்கள். நான் அவரை விமானத்தில் சந்தித்தேன். ஒருவருக்கொருவர் முகமன் தெரிவித்துக் கொண்டோம். பேசிக் கொண்டோம். அப்போது அவர் உயர்ந்த பண்பாட்டோடு, மதுரைக்கு வந்தால் வீட்டுக்கு வாருங்களேன் என்றார். நான் அவரது இல்லத்திற்குச் சென்றேன். மலரும் நினைவுகளாக எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டேன். 
 
நெடு நாட்களுக்கு முன்பு, இருபத்து ஐந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முரசொலியை இந்த மதுரையில் தொடங்குகின்ற காலத்தில், அந்த விழாவில் நான் ஆற்றிய உரை அவருக்கு நினைவு இருக்கும். நான் பழைய திரைப்படப் பாடல்களை விரும்பிக் கேட்பவன். இந்த மதுரை தந்த,ஏழு இசையிலும் முத்திரை பதித்த டி.எம். சௌந்தர்ராஜன் அவர்கள் பாடிய பாடல்களை இன்றைக்கு இங்கே வரும்போதும் கேட்டுக்கொண்டு வந்தேன். எந்நாளும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். அவரும் இதே உணர்வுகளைக் கொண்டவர். 
 
எனக்கு ஒரு ஆயிரம் பாடல்கள் பிடித்தமானவை. ஜி.இராமநாதன், எÞ.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், சுப்புராமன், விÞவநாதன் இராமமூர்த்தி, இளையராஜா  இசை அமைத்த பாடல்களைத் நாள்தோறும் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன். அது பொழுது போக்கிற்காக அல்ல. மன அழுத்தத்தைச் சற்றுக் குறைக்கும். அழகிரி அவர்களுக்கும் அதே பாடல்கள்தான் பிடிக்கும் என்பதை, அந்தக் காலத்தில் நான் அவரது வீட்டுக்குச் சென்று இருந்தபோது அறிந்தேன். இவையெல்லாம் எனக்கும் பிடித்தமானவை  என்றவுடன், அதையெல்லாம் அப்படியே அள்ளிக் கொடுத்து விட்டார். 
 
அதன்பிறகு நான் வெளிநாடு சென்று இருந்தபோது, இங்கே கிடைக்காத திரைப்படங்களின் ஒளிநாடாக்களை வாங்கிக் கொண்டு வந்தேன். உலகத்தில் வீரச் சமர் புரிந்தவர்களுடைய காவியங்களைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். இன்றைக்கும், உமர் முக்தார் திரைப்படத்தை ஒரு மணி நேரம் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். குறிப்பாகச் சில காட்சிகளை அடிக்கடி போட்டுப் பார்ப்பேன். பென் ஹர் திரைப்படத்தில் தேர்ப்பந்தயத்தைப் பார்ப்பேன். பத்துக் கட்டளைகள் (கூநn ஊடிஅஅயனேஅநவேள) திரைப்படத்தில், கடல் இரண்டாகப் பிளப்பதைப் பார்ப்பேன். உமர் முக்தாரில், இத்தாலிய இராணுவத்தினரோ பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போது அவர் பேசுவதைப் பார்ப்பேன். 
 
இதைப்பற்றியெல்லாம் நீண்ட நேரம் அவரோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டு வெளியே வருகின்றபோது செய்தியாளர்கள் கேட்டார்கள். நாங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம் என்று கூறினேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருக்கின்றார். 
 
கலைஞர் அவர்களே, தி.மு.கழகம் என்பது கோடிக்கணக்கான தொண்டர்கள் இரத்தமும், வியர்வையும், கண்ணீரும் சிந்தி வளர்த்த இயக்கம். இன்றைக்கு அந்தக் கட்சி பாழாவதைக் கண்டு நான் வருந்துகிறேன். நானும் அந்தக் கட்சிக்காக 30 ஆண்டுகள் உழைத்தவன். அதற்காக இன்று உரிமை கொண்டாடவில்லை. ஏதாவது பங்கு கேட்க வரவில்லை. நான் அழகிரியைச் சந்தித்தது உங்களுக்கு ஆத்திரமா?  நான் பார்த்தாலே பாவமா? உங்கள் மகன் என்னோடு உரையாடியதே பாவமா?
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...