அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலோ தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன்: வடிவேலு உறுதி

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   11 , 2021  10:06:49 IST

இனிவரும் காலங்களில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.
 
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, ‘எனக்கு ஏற்ப்பட்ட துன்பம் போன்ற துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்கமுடியாது. என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது.
 
கொரோனோ காலகட்டத்தில் என்னுடைய காமெடியை பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். கொரோனா வந்தபிறகு என் பிரச்னை சாதாரணமாக சென்றுவிட்டது. முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு எல்லாம் நல்லதாக நடைபெற்றது.
 
நண்பன் விவேக் மறைவு நாட்டுக்கும் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு. அந்த இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இனிவரும் காலங்களில் இயக்குநர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்கமாட்டேன் என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...