![]() |
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல!Posted : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22 , 2021 11:37:04 IST
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல என்று தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆய்வு செய்த தேசிய குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு தடுப்பூசி மீதான சந்தேகத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியது. விவேக்கின் உயிரிழப்பிற்கு தடுப்பூசி காரணமில்லை என சுகாதாரத்துறை சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.
|
|