அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வாழ்: விமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   16 , 2021  10:02:16 IST


Andhimazhai Image

அருவி படம் தந்த இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த படம் வாழ். பெயருக்கு ஏற்றமாதிரி வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து வாழச்சொல்கிறது.

உன் வாழ்க்கையில் நீ சந்திக்கும் மனிதர்கள் உன் வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிப்பார்கள் என்று பொலிவியாவில் பழமொழி சொல்வார்களாம். இதைச் சொல்லும் வெளிநாட்டுப் பெண் பாத்திரம் செம அழகு. பேர் என்னவோ எகுவேரா வாம்! நெற்றியில் பொட்டு, இடுப்புக்குக் கீழ் சற்றே நீளும் டவுசர்.  நீளமான கால்களுடன் அலையும் ஹிப்பி போன்ற ஒரு பாத்திரம். கேட்டால் மதுரையில் ஆந்த்ரோபாலஜியில் பிஎச்டி பண்ணுகிறேன் என்கிறாள். எடுத்த எடுப்பில் போலீஸ்காரர்களுடன் சண்டை போட்டு ஆட்டம் காட்டும் பெண். நாளை.. நாளைக்கு.. என கொஞ்சு தமிழ். இப்படி ஒரு பெண் நட்பு எசகுபிசகாகக் கிடைக்கையில் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறேன் என அந்த பெண்ணுடன் கிளம்பிவிடுகிறான் நாயகன். இந்த பாத்திரம் ஏற்றிருக்கும் நடிகை திவா தவான் நல்வரவு.

நாயகன் ப்ரகாஷாக நடித்திருக்கும் ப்ரதீப் அந்தோணி பொருத்தமான தேர்வு. முகம் நிறைய தாடியுடன் கணினித் துறையில் வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு பயந்து வாழும் நடுத்தர வர்க்க பையன். அவர் சாவு வீட்டில் சந்திக்கும் உறவுப் பெண் அவரது வாழ்க்கைப் பாதையை திசை திருப்புகிறாள். அந்த பெண்ணாக நடித்திருக்கும் டிஜே பானு உண்மையில் எல்லா வகையிலும் வலிமையான பெண் பாத்திரம். பிரகாஷ் தன் மீது ஆசைப்படுவதை ஒரே பார்வையில் புரிந்துகொண்டு அவனை தன் இஷ்டத்துக்கு வளைத்துக்கொண்டு, காரில் அழைத்துச் செல்வதிலிருந்து தொடங்குகிறது படத்தின் ரங்கராட்டினம். உச்சியிலிருந்து எடுத்த காட்சிகள் மூலம் சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை, காரைக்கால், கும்பகோணம், தஞ்சாவூர், ராமேஸ்வரம் பயணம் செய்யும் படம், பிறகு சட்டென்று விமானம் ஏறி பப்புவா நியூகினியா, இந்தோனேசியா எனப் பறந்துவிடுகிறது.

நாம் பார்த்திராத இடங்கள், பார்த்திருந்தாலும் அரிய கோணங்கள் என அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். திகட்டத் திகட்ட பசுமையும் விரிந்த கடலும் மீன்கள் உலவும் தெளிந்த நீருமாக ஒரு கட்டத்தில் படம் அருமையான பயண மூவியாக மாறிவிடுகிறது.

சற்று தவறினாலும் டாகுமெண்டரியாக மாறிவிடும் அபாயம் கொண்ட இந்த படத்தை  கூர்மையான திரை மொழியால் நுட்பமான எடிட்டிங்காலும் விறுவிறுப்பான பீல்குட் மூவி ஆக்கி இருக்கிறார்கள்.

யாத்ரா என்ற பெயரில் வரும் ’ ஹைபர் ஆக்டிங்’ சிறுவன் பாத்திரம் கலகலப்பை ஊட்டுகிறது. ஏகப்பட்ட அடுக்குகளும் இருண்ட மூலைகளும் கொண்டதாக இருப்பது டிஜே பானு நடித்திருக்கும் பாத்திரம். ப்ரகாஷ்.. பிரகாஷ் எனக் குழைவதாகட்டும்; இன்னொரு பக்கம் தான் செய்திருக்கும் குற்றத்தை நினைத்து உடைந்துபோவதாகட்டும்; தாய்மையின் உணர்வுகளை சுமப்பதாகட்டும்; எவ்வளவு கனமான பாத்திரம். கொஞ்சம் பிசகினாலும் வெறுப்புக்கு உள்ளாகிவிடும் பாத்திரம். அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் கிரைம் தொடர்பான பெண் பாத்திரத்தை அதன் சுயமான கோணத்தில் நம்மையும் பார்க்க வைத்ததில் இயக்குநரின் திறமைப் பளிச்சிடுகிறது!


பயணத்தின் போது தஞ்சாவூரில் ஒரு தாத்தாவைப் பார்க்கிறார்கள். அவர் யசோதா என்ற புறாவின் கதையைச் சொல்கிறார். படம் முழுக்க அந்த கதையின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருக்கிறது.

இவ்வளவு குளுமையான படத்தின் காமிரா பற்றி சொல்லாவிட்டால் எப்படி? ஷெல்லி காலிஸ்ட்டின் காமிரா கண்கள் நிச்சயம் பேசப்படும். பசுமையான காடுகள், அகண்ட சாலைகள், குறுகிய தெருக்கள், அருவிகள், கடல்கள், இருண்ட மற்றும் ஒளி பெருகும் குகைகள் என அள்ளி இருக்கிறார்கள். திரை முழுக்க ஒரு ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கிறது! ப்ரதீப்குமாரின்  இசையும் பாடல்களும் அளவாய் இனிமையாய் வந்துபோகின்றன. அருணகிரிநாதரின் பாடல் திடீர் ஆச்சர்ய அதிர்ச்சி!படத்தின் கதையை ஓர் அப்பாவி இளைஞன். அவன் வாழ்க்கையில் இரு பெண்கள். அவர்கள் வருகை அவனுக்குள் ஏற்படுத்தும் மாற்றம் என்று சுருக்கிவிடலாம். ஆனால் இந்த வரிகளுக்குப் பின்னால் வாழ்க்கையை வாழ்ந்துபார் என்ற சப்தம் ஓர் பேரருவியின் இரைச்சலாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது!

 

 
-அந்திமழை விமர்சனக்குழு 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...