???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா 0 பெண் குழந்தை பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக-வுக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின் 0 ட்ரம்புக்கு அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பதாக தகவல்! 0 இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் ! 0 யாரும் பிச்சை போடவில்லை: ஆர்.எஸ்.பாரதிக்கு திருமாவளவன் பதிலடி 0 பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து: பா.ம.க. வரவேற்பு 0 குள்ள உருவத்தைப் பார்த்து கிண்டல்: அழுத சிறுவனை உலகமே அணைத்து ஆறுதல் சொன்னது! 0 NPR-ல் விஷமத்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன: ப.சிதம்பரம் 0 பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண் தலைக்கு ரூ.10 லட்சம்: ஸ்ரீராம் சேனா 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'வானம் கொட்டட்டும்' – திரைவிமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   07 , 2020  06:03:30 IST


Andhimazhai Image
தன் அண்ணனை வெட்டியவர்களை ஆத்திரத்தில் வெட்டிக்கொல்லும் சரத்குமார் சிறைக்கு சென்று 13 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகிறார். அதுவரை தாய் ராதிகாவின் அரவணைப்பில் வளர்கிறார்கள் பிள்ளைகளான விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷும். இவர்களுக்கு அப்பா மீது இருக்கும் கோபமும, முரண்பாடும் நீங்கும் சந்தர்ப்பங்களை அன்பால் நிறைத்து சொல்கிறது வானம் கொட்டட்டும்.
 
சரத்குமார் சிறைக்கு சென்ற பின்னர் தேனி சின்னமனூரில் இருந்து குழந்தைகளுடன் சென்னைக்கு குடியேறுகிறார் ராதிகா. அவரது உழைப்பால் வளரும் பிள்ளைகள் மீது பெரியப்பா பாலாஜி சக்திவேல் அன்பை கொட்டுகிறார். படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டே கார் டிரைவராக பணம் ஈட்டும் விக்ரம் பிரபு, சட்டக் கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் குறும்புத்தனம் நிரம்பிய அண்ணன் தங்கையாக உலவுகிறார்கள்.
 
வாழைப்பழ ஏற்றுமதி செய்த பெரியப்பா பாலாஜி சக்திவேல், பணத்தை வசூல் செய்ய கோயம்பேடு வரும்போது இந்த தொழில் வாய்பை அண்ணன் தங்கை இருவரும் அறிகிறார்கள். தாங்களும் வாழைப்பழ மண்டி ஆரம்பிக்க முடிவெடுத்து அதை தொடங்குகிறார்கள்.
 
ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பனாக வரும் சாந்தனு, தொழிலில் நஷ்டம் அடைந்த அப்பாவின் கடன்களுக்கு பொறுப்பேற்று சிரமப்படும் மடோனா செபஸ்டியுடனான விக்ரம் பிரபுவின் நட்பு என முன்னும் பின்னுமாக காட்சிகள் நகர்கின்றன.
 
கோபத்தில் அரிவாள் வீசிவிட்டு ஜெயிலுக்கு சென்ற மனிதரின் குடும்பம் பொருளாதார ரீதியாகவும், தகப்பனின் இருப்பற்ற வெறுமையிலும் உழலும் கதையில் முதல்பாதி விரிகிறது. அதில் அண்ணன் – தங்கை இடையிலான குறும்பத்தனங்கள், தொழிலில் வெற்றிபெறுவதற்கான முயற்சிகள் போன்றவற்றைக்கொண்டு காட்சிகள் செல்கின்றன. இடையில் சரத்குமாரால் கொல்லப்பட்டவரின் மகன் நந்தா பழிவாங்குவதற்காக ஆயத்தமாகிறார். இப்படி பல்வேறு காட்சிக் கிளைகளாக படம் நகர்ந்தாலும், முதல்பாதி வேகம் குறைவு.
 
விடுதலை ஆகி சிறையில் இருந்து சரத்குமார் வந்த பிறகே திரைக்கதையில் அழுத்தமான நிலைத்தன்மை ஏற்படுகிறது. பல ஆண்டுகளை ஜெயிலில் கழித்த சரத்குமார், பிள்ளைகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்களுடன் முரண்படுகிறார். இவையெல்லாம் சரத்குமார் மீது பிள்ளைகள் இருவருக்கும் வெறுப்பை ஏற்படுத்த இவர்களுக்கு மத்தியில் பாசப் போராட்டத்தால் தவிக்கிறார் ராதிகா.
 
கதைக்கேற்ப அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சரத்குமார் – ராதிகா காட்சிகள் அனைத்தும் நெகிழ்வான தருணங்கள். அசுரன் படத்தில் கச்சிதமாக மட்டுமே தெரிந்த பாலாஜி சக்திவேல் இப்படத்தில் வெகுச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது உடல்மொழிகூட அதற்குரிய வெகுளித்தனத்தை உணர்த்தியிருக்கிறது.
 
சித் ஸ்ரீராம் இசையில் ’கண்ணு தங்கம்’ பாடல் சிறப்பு. ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு மணிரத்னம் வகைமை காட்சிகளை நினைவூட்டியது. கண் இமைக்கவிடாத அளவுக்கு விறுவிறுப்பை எதிர்பார்க்காமல் காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் உணர்வுபூர்வமாக அனுபவிக்க இணங்கினால் வானம் கொட்டட்டும் இதம் அளிக்கும்.      


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...