அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வகுப்பறையில் அமர்வது தொடர்பான சண்டை! நண்பனை சுட்டுக்கொன்ற 14 வயது மாணவன்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   31 , 2020  17:18:44 IST


Andhimazhai Image



உத்தரபிரதேசத்தில் பள்ளி வகுப்புறையில் அமர்வது தொடர்பான சண்டையில், மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனை சுட்டுக்கொன்றுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷார் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே அமரும் இடம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) மோதல் ஏற்பட்டுள்ளது. 14 வயது மாணவர்களுக்கிடையேயான இந்த மோதல் கொடூர படுகொலையில் முடிந்திருக்கிறது.

மோதலில் ஆத்திரமடைந்த அந்த மாணவர், இராணுவத்தில் இருந்து விடுமுறையில் திரும்பியிருக்கும் தனது மாமாவின் கைத்துப்பாக்கியை திருட்டுத்தனமாக பள்ளிக்கு கொண்டுவந்திருக்கிறார்.

பள்ளிக்கு இன்று காலை வந்த அந்த மாணவர், நேற்று தன்னுடன் சண்டையிட்ட மாணவரின் தலை, மார்பு, வயிறு ஆகிய இடங்களில் மூன்றுமுறை சுட்டிருக்கிறார். இன்று காலை 11 மணிக்கு வகுப்பறையிலேயே நடந்த இந்த சம்பவத்தில், சுடப்பட்ட மாணவர் அங்கேயே உயிரிழந்தார்.

உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முயன்ற அந்த மாணவனை ஆசிரியர்கள் சிலர் மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவன் வானத்தை நோக்கி சுட்டிருக்கிறான். பின்னர் பிடிப்பட்ட அந்த மாணவன் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அந்த மாணவனின் பள்ளிக்கூட பையிலிருந்து மற்றொரு நாட்டு துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...