???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் புகழ்பெற்ற பெண் நீதிபதி மறைவு

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   19 , 2020  02:04:27 IST


Andhimazhai Image

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் ஜின்ஸ்பேர்க் அவரது 87-வது வயதில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதியான ரூத் பேடர் ஜின்ஸ்பேர்க்கின் 86-வது பிறந்தநாள் சமீபத்தில் அமெரிக்க மக்களால் பரவலாக கொண்டாடப்பட்டது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரூத் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நீதிமன்றம் திரும்பியதையடுத்து அவரது உற்சாகத்தை கண்டு அமெரிக்க மக்கள் வியந்தனர்.

அதன்பிறகும் நுரையீரல் புற்றுநோயாடு போராடியவாறே தொடர்ந்து இயங்கிய ரூத் பேடர் ஜின்ஸ்பேர்க் இப்போது மறைந்திருக்கிறார். நீதித்துறை மட்டுமின்றி பெண்கள் உரிமை சார்ந்த முன்னெடுப்புகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் ரூத். அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நிலவிய பழமைவாத கண்ணோட்டங்களை உடைத்து புத்தாக்கமான கருத்துக்களை முன்வைத்தவராக இவர் பார்க்கப்படுகிறார். அமெரிக்க நீதித்துறையில் 'Ruth' என்கிற பெயரை பயன்படுத்தாமல் 'Truth' குறித்து பேசமுடியாதென்கிற சொல்லாடல் உண்டு.

கடந்த 1993-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தான் ரூத்தை முதன்முதலில் அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். தொடர்ந்து அவரது செயல்பாடுகளால் மக்களை கவர்ந்த ரூத், பெண்கள் மத்தியில் ராக் ஸ்டாராக கொண்டாடப்பட்டார். ரூத்தின் பெண்ணிய செயல்பாடுகளை போற்றும் வகையில் அவரது உருவத்தை, பெயரை தமது உடலில் அமெரிக்க பெண்கள் பச்சைகுத்திக் கொண்டனர். 2000-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷுக்கு ஆதரவளித்து மக்கள் மத்தியில் இருந்த குழப்பத்தை தீர்த்துவைத்தார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது ரூத் தனது விமர்சனத்தை நேரடியாக முன்வைத்தார்.

ரூத் பேடர் ஜின்ஸ்பேர்கின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. நீதிமன்ற செயல்பாடுகளை தாண்டி, அமெரிக்க அரசியல் விவகாரங்களிலும் தனது மனதில் இருக்கும் கருத்தை ரூத் வெளிப்படுத்த தயங்கியதில்லை.

80 வயதை கடந்தும் அவர் நீதிபதியாக பணியை தொடர்ந்ததற்கு சிலர் விமர்சனம் செய்தபோதும், அதனை புறந்தள்ளி உற்சாகமாக இயங்கினார். சமீபத்தில் ரூத் பேடர் ஜின்ஸ்பெர்கின் இடத்திற்கு வேறொருவரை நியமிக்கும் பரிந்துரையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரூத் மீதான காழ்புணர்ச்சியின் காரணமாக ட்ரம்ப் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிருப்தி நிலவியது. ரூத் பேடர் ஜின்ஸ்பெர்கின் உழைப்புக்கும், உற்சாகத்துக்கும் அளிக்கப்பட்ட மக்கள் ஆதரவு எப்போதும் குறையாமல் இருந்தது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...