அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்! 0 இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி அமல்படுத்துவதை நான் எதிர்க்கிறேன்: கிரண் ரிஜிஜு 0 தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை! 0 தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழையே பெய்யும்! 0 அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நீதிமன்ற படியேறிய எடப்பாடி பழனிசாமி 0 பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் 0 வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு 0 மும்பையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை! 0 குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20% வாக்குப்பதிவு! 0 ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு 0 கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை டிபியாக வைத்து 40 லட்சம் ஏமாற்றிய பெண்! 0 பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து! ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து உலகசாதனை! 0 தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை! 0 'கடைமையை செய்யாமல் தேவையில்லாதவற்றை ஆளுநர் பேசுகிறார்' – கி.வீரமணி 0 ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்: கவர்னருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மைசூரிலிருந்து தமிழ் கல்வெட்டுகளை விரைந்து மீட்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

Posted : புதன்கிழமை,   நவம்பர்   23 , 2022  11:02:00 IST

மைசூரிலிருந்து தமிழ் கல்வெட்டுகளை விரைந்து மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
"இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60,000க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகளேயாகும். தமிழர்களின் அரசியல், ஆட்சி முறை, வரலாறு, போர் வெற்றிகள், பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல் ஆகிய அனைத்திற்கும் சான்றாகவும் கல்வெட்டுகள் திகழ்கின்றன. தமிழ் முன்னோர்கள் தங்கள் வாழ்வியலை வருங்காலச் சந்ததியினருக்குக் கடத்தும் உயரிய நோக்கத்தோடு, அன்னைத் தமிழ் எழுத்துக்கள் கொண்டு செதுக்கிய வரலாற்றுப் பதிவுகளாகிய சிறப்புமிக்க தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தும் தொடக்கத்தில் சென்னையிலும், பின்பு உதகமண்டலத்திலும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தன.
 
கடந்த 1966-ஆம் ஆண்டு மத்திய அரசால் கர்நாடக மாநிலம் மைசூருக்கு தமிழ்க் கல்வெட்டுகள் அத்துமீறிக் கொண்டு செல்லப்பட்டன. அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப் படாததால் கடந்த 56 ஆண்டுகளாக மெல்ல மெல்ல சிதைந்து அழிந்து வருகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழக் கல்வெட்டுகளை மீட்கும் பொருட்டு தமிழ்ப் பற்றாளர்களால் தொடரப்பட்ட பொதுநல வழக்கினை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, 2021ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தையும் தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டது.
 
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின்படி கடந்த ஓராண்டு காலத்தில் இதுவரை எத்தனை கல்வெட்டுகள் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அறிய நாம் தமிழர் கட்சியின், தமிழ் மீட்சிப் பாசறையும், வழக்குரைஞர் அறிவன் சீனிவாசன் அவர்களும் இணைந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தனர். அதன் மூலம் தற்போது மைசூரில் இருக்கும் 65000 கல்வெட்டுகளில் 20000 கல்வெட்டுப் படிகள் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், தொல்லியல் துறைக்கும், பொதுநல வழக்கினை தொடர்ந்த வழக்குரைஞர் பெருமக்களுக்கும், நல்லதோர் தீர்ப்பினை அளித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் இதுவரை 20,000 கல்வெட்டுகள் மட்டுமே தமிழ் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது சற்று ஆறுதல் அளித்தாலும், கல்வெட்டுகளை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வினைப் போக்கி, தமிழ்நாடு அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் மைசூரிலிருந்து விரைந்து தமிழ்நாட்டிற்கு மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். அத்தோடு, தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தையும் உயர்தர அரங்கம் அமைத்துப் பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தி வைப்பதோடு, ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் படியெடுத்து இணையத்தில் எளிதாகக் கிடைக்கவும் வழிவகைச் செய்ய வேண்டும். மேலும், உயர்நீதிமன்ற ஆணையின்படி தமிழ்க் கல்வெட்டுகளைத் திராவிடக் கல்வெட்டுகள் என்று கூறாமல், இனியாவது தமிழ்க் கல்வெட்டுகள் என்றே ஆவணப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...