???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி 0 குட்கா வழக்கு: 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி 0 பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி சஸ்பெண்ட் 0 ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ காவலில் பாஜக எம்.எல்.ஏ.!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   15 , 2018  10:27:12 IST

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கை, 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ-க்கு லக்னோ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், தனது உறவினருடன் கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி, பங்கார்மா தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வான குல்தீப் சிங் செங்காரின் வீட்டுக்கு சென்றிருக்கிறர். 
 
வேலை கேட்டு சென்ற தன்னை, குல்தீப் சிங் மற்றும் சிலர் சேர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்த இளம்பெண் போலீசில் புகார் செய்தார். ஆனால், எம்.எல்.ஏ.வை கைது செய்யாமல், அந்த பெண்ணின் தந்தையை கடந்த 3 ஆம் தேதி போலீசார் கைது செய்த நிலையில், போலீஸ் காவலில் அவர் உயிரிழந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
 
இதனால் மனமுடைந்த அந்த பெண், கடந்த 8-ந் தேதியன்று, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன்பாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 
 
சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், உத்தரபிரதேச அரசை கண்டித்த நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு அம்மாநில அரசு பரிந்துரைத்தது. 
 
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், 7 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் குழு டெல்லியில் இருந்து  லக்னோ வந்தது. 17 மணி நேர விசாரணைக்குப்பின், எம்.எல்.ஏ. குல்தீப் சிங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். 
 
இந்நிலையில், குல்தீப் சிங்கை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு லக்னோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
இதனிடையே, வேலை வாங்கித்தருவதாக கூறி, அந்த இளம் பெண்ணை எம்எல்ஏ வீட்டுக்கு அழைத்துச்சென்ற ஷாஷி சிங் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...