அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உ.பி.யில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   27 , 2021  10:54:08 IST

உத்தரப் பிரதேசம் மாநில ஆக்ராவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடிய 3 காஷ்மீர் மாணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பு இன்றி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை போட்டியில்  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். பாகிஸ்தானின் வெற்றியை பலரும் கொண்டாடிவரும் சூழலில் இந்தியாவின் தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
 
இந்த தோல்விக்கு இந்திய பந்துவீச்சாளர் முகமது சமி சரியாக பந்து வீசாததே காரணம் என்றும் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் ஒரு சிலர் மத ரீதியாக விமர்சிக்க தொடங்கினர். சமிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உட்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானின் வெற்றியை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரிக்கை வைத்துள்ளார்.
 
இதேபோல், உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீர் மாணவர்களில் சிலர்  இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...