???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புழல் ஏரியில் 3 மணிக்கு நீர்திறப்பு : பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல் 0 மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி? 0 மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் ’அம்ரூத்’ திட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார் 0 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு! 0 டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் மரணம்: நிதியுதவி அறிவித்தார் பஞ்சாப் முதலமைச்சர் 0 ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம்: கனமழை தொடர வாய்ப்பு 0 நிதி முறைகேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை 0 தனியார் பாதுகாப்பை வைத்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் ஜெ.தீபா தகவல் 0 ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும்: குருமூர்த்தி 0 ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : பாஜக முன்னிலை 0 புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் திறப்பு : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 0 விவசாயிகள் போராட்டம் : பத்ம விபூஷன் விருதை திருப்பி அளித்த பிரகாஷ் சிங் பாதல் 0 புரெவி புயல் : தமிழகத்தில் அடுத்த ஆறுமணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை 0 ’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை 0 வலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஊரடங்கு தளர்வு 2.0 ஜூலை 31 வரை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   29 , 2020  23:26:07 IST

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு 2.0 தொடர்பான புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

* ஊரடங்கு தளர்வு 2.0 ஜூலை 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

* பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி மையங்கள், சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரெயில், சினிமா, உடற்பயிற்சி நிலையம், நீச்சல் குளம், மத கூட்டங்கள் உள்ளிட்டவை செயல்பட
ஜூலை 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

* சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சாரம், மதம் நிகழ்ச்சிகளும் மக்கள் கூட்டமாக கூடவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.

* இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் உள்ள முழு ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையிலேயே இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டும்
விலக்கு அளிக்கப்படுகிறது.

* பொது இடங்கள், வேலை செய்யும் இடங்கள், பயண நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

* உள்நாட்டு விமானங்கள், பயணிகள் ரெயில் சேவைகள் குறைந்த பட்ச எண்ணிக்கையில் இயங்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை பகுதி வாரியாக தொடர்ந்து நீட்டிக்கப்படும்.

* ’UNLOCK-2’ வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படுகிறது என்பதை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதிபடுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...