???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   25 , 2019  22:38:59 IST

திருப்பூர் குளத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூர் வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி தனது மூன்று மகன்களையும் வளர்த்து வருகிறார். இவரது மூத்த மகன் மணித்துரை மற்றும் இரண்டாவது மகன் மணிகண்டன் இருவரும் பனியன் நிறுவனங்களிலேயே பணியாற்றி வந்த சூழ்நிலையில் உடன் பணியாற்ற வந்தவர்களின் உதவியுடன் ரஞ்சித் என்பவரது பழக்கம் கிடைத்துள்ளது.

இவர் தாய்லாந்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகவும் 40 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் என ஆசை வார்த்தை கூறியதை நம்பி, நம்பி மாரியம்மாள் தனது இரண்டு மகன்களையும் அனுப்புவதற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை ரஞ்சித்திடம் கொடுத்துள்ளார்.

அதனைக் கொண்டு இருவருக்கும் தாய்லாந்து செல்வதற்கான டிக்கெட் மற்றும் விசா எடுத்து அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற இருவருக்கும் ஓட்டலில் வேலை வாங்கித் தந்தது மட்டுமல்லாமல், இருவரையும் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததுடன் தங்களது தாய் மாரியம்மாளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ரஞ்சித்திடம் கேட்டதற்கு சரிவர பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து இளைய மகன் மணிகண்டனை, ரூ. 58 ஆயிரம் செலவழித்து மீண்டும் தமிழகத்திற்கு வரவழைத்துள்ளார் மாரியம்மாள். மூத்த மகன் அங்கேயே இருந்த சூழ்நிலையில் அவரது விசா காலம் முடிவடைந்தது. இதனால் அவரால் திரும்பி வர முடியாமல் தாய்லாந்திலேயே தங்கியுள்ளார். அவரை மீண்டும் வரவழைக்க தேவையான தொகையும் தன்னிடம் இல்லாத சூழ்நிலையில் ரஞ்சித் மீது திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும், தாய்லாந்தில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுத் தரக் கோரியும் மாரியம்மாள் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த தகவல் அறிந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மணிதுரை தாய்லாந்தில் இருந்து வெளியேறுவதற்கான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...