அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறது மத்திய குழு

Posted : புதன்கிழமை,   நவம்பர்   24 , 2021  09:37:24 IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தது. இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தினர். முதல் நாளான நேற்று முன்தினம், சென்னை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகளைப் பார்வையிட்டனர். இரண்டாவது நாளான நேற்று, மத்திய நிதியமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையிலான குழுவினர், வேலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து ராணிப்பேட்டைக்கு சென்றனர்.
 
முதலில் அத்திப்பட்டு கிராமத்தில் பாலாற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியை மத்திய குழு பார்வையிட்டது. தொடர்ந்து மேல புலம்புதூர் கிராமத்தில் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை குழு ஆய்வு செய்தது, அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் 25 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது
 
உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான மற்றொரு குழுவினர், காலையில் புதுச்சேரியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நாகை மாவட்டத்துக்கு சென்று பாப்பாக்கோவில் பகுதியில் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தனர். கால்நடைகள் பாதிப்பு, மனித உயிரிழப்புகள், வீடுகள் சேதம், விவசாய பாதிப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய காணொலி, மத்திய குழுவுக்கு திரையிடப்பட்டது.
 
பின்னர் மத்திய குழுவினரிடம் விவசாய சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர். பாண்டியன், காவிரி தனபாலன் உள்ளிட்டோர் மனுக்களை அளித்தனர். நாகை மாவட்டத்துக்கு நிவாரண நிதியாக 200 கோடி ரூபாய் தேவை எனறு ஆட்சியர் அருண்தம்புராஜ் மத்திய குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்காலில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்த ராஜிவ் சர்மா தலைமையிலான மத்திய குழு, திருப்பட்டினம் அருகே கீழையூரில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். வீடுகள், நெற்பயிர்கள், கால்நடைகள் சேதம் குறித்த புகைப்பட கண்காட்சியையும் மத்தியக்குழு பார்வையிட்டது.
 
பின்னர், தஞ்சை அம்மாப்பேட்டையை அடுத்த சேர்மநல்லூரில் சம்பா, தாளடி பயிர்களை ஆய்வு செய்தனர். பாதிப்புகள் குறித்த புகைப்படக் கண்காட்சியையும் அக்குழு பார்வையிட்டது. ஆனால் பாதிப்பு குறித்து தங்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பெயரளவுக்கு ஆய்வு நடந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இரவில் ஆய்வு நடத்தியது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
 
2 நாட்களாக சென்னை, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வை மேற்கொண்ட மத்திய குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர் டெல்லி சென்று மத்திய அரசிடம் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு மழை, வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...